
கிருஷ்ணபட்டணம் ஆனந்தய்யா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திரா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர மாநில அரசாங்கம் ஆனந்தய்யாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. எத்தகைய அழுத்தத்திற்கும் ஆளாகாமல் ஆயுர்வேதம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனந்தய்யா அளிக்கும் ஆயுர்வேத மருந்துகளுக்குத் தடையில்லை. ஆனந்தய்யா அளித்துவரும் மருந்துகளால் எந்த ஒரு தீமையும் இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவோடு போராடி ரிடயர்டு ஹெட்மாஸ்டர் கோட்டைய்யா இறந்த இதேநாளில் ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திரா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால் ஆனந்தய்யாவிடம் மருந்து வாங்குவதற்கு கோவிட் பாசிடிவ் உள்ள நோயாளிகள் வராமல் இருக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம் தெரிவிக்கிறது அவர்களுக்கு பதிலாக அவர்கள் குடும்பத்தினர் வந்து மருந்து வாங்கிச் சென்றால் கோவிட் பரவும் ஆபத்து இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மக்களுக்கு இது ஒரு இனிய செய்தி. இறுதியில் ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்தது. தேசிய ஆயுர்வேத பரிசோதனை நிலையம் (சிசிஆர்ஏஎஸ்) கமிட்டி கடந்த சில நாட்களாக செய்த பரிசோதனையின் அறிக்கை வெளி வந்ததால் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ண பட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் ஆயுர்வேத மூலிகை மருந்து குறித்து மாநில அரசாங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.
ஆனால் கண்ணில் விடும் சொட்டு மருந்தை தவிர பிற ஆயுர்வேத மருந்துகளுக்கு அரசாங்கம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. ஆனந்தய்யா தயார் செய்து வரும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொண்டாலும் பிற மருந்துகளையும் பயன்படுத்துவதை விட வேண்டாம் என்று மாநில மக்களுக்கு ஆந்திரப்பிரதேச அரசாங்கமும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவதால் எந்த பக்கவிளைவும் இருக்காது என்றும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களால் மூலிகை மருந்தை அவர் தயார் செய்வதாகவும் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். கண்ணில் விடும் மூலிகை மருந்து குறித்து முழு அறிக்கை வெளிவருவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனந்தய்யா ஆயுர்வேத மருந்து பயன்படுத்தினால் covid-19 குறைந்துவிடும் என்று சொல்வதற்கு எப்படிப்பட்ட ஆதாரங்களும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள். மறுபுறம் கண்ணில் விழும் சொட்டு மருந்து எடுத்துக்கொண்டு குணமடைந்த ரிடயர்டு ஹெட்மாஸ்டர் கோட்டையா இன்று மரணமடைந்தார்.
கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து வாங்கிச் செல்வதற்கு அங்கு செல்ல கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளாது. அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே சென்று ஆயுர்வேத மருந்து எடுத்து வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
சட்டப்படி ஆனந்தய்யா மருந்து வழங்குவதற்கு மாநில அரசாங்கம் அனுமதி தேவையில்லை என்று ஆனந்தய்யா தரப்பு வக்கீல் கோர்ட்டில் வாதிட்டார். அவர் இலவசமாகவே இயற்கை மருந்துகளை வழங்குகிறார் என்றூம் அவர் குடும்பத்தினர் இதில் 90 வருடங்களாக அனுபவம் உள்ளவர்கள் என்றும் வழக்கறிஞர் கூறிப்பிட்டார். பாரத தேசத்தில் பல வீடுகளில் இயல்பாகவே பல குடும்பங்கள் இயற்கை மருத்துவத்தை கடைபிடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆந்திர பிரதேஷ் அரசாங்கமே ஆனந்தய்யா மருந்தை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று மேலும் இரு விண்ணப்பங்கள் செய்த மனு குறித்து ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது.