தங்க செயினை தலைமுடியாக மாற்றிய மெக்சிகோவின் பிரபல ராப் பாடகர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டன் சூர் அனைவரையும் கவரும் வண்ணம் அவரது தலைமுடியை நீக்கி அதற்கு பதிலாக தங்க சங்கிலியை தலைமுடி போல் வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் இந்த தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலமாக தலையில் வைத்துள்ளார். மேலும், இதனை யாரும் முயற்சி செய்து பார்க்க மாட்டார்கள் என்றும் கேலியாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய பற்களையும் தங்கத்தால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பலர் பார்த்து தற்போது வைரலாகி வருகிறது.