
தாய் கரடி ஒன்று தனது குட்டிக்கு விளையாட்டு பூங்காவில் எப்படி சறுக்கி விளையாடுவது என கற்றுக்கொடுக்கிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு கரடி சொல்லிக்கொடுக்கும் உற்சாக விளையாட்டு ஒரு எடுத்துக்காட்டு என இணையத்தில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரோலினாவின் ஆஷெவில்லில் உள்ள ஐசக் டிக்சன் தொடக்கப் பள்ளியின் ( Isaac Dickson Elementary School )ஆசிரியர் பெட்ஸி ஸ்டாக்ஸ்லேஜர் இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
“இந்த நாள் என் நாள் – பள்ளியில் விளையாட்டு மைதானம் … முழுவதும் பாருங்கள் !! தாய் கரடி எவ்வாறு சர்க்கஸில் விளையாடுகிறது என்பதைப் பாருங்கள் என வீடியோவின் தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
பகிரப்பட்டதிலிருந்து, 3.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது பல்வேறு சமூக ஊடக தளங்களில் பலரால் மீண்டும் பகிரப்பட்டது.
இது குறித்து பலரும் கமெண்ட்ஸில் நான் வேடிக்கையான கரடிகளை விரும்புகிறேன் என்று ஒரு பேஸ்புக் பயனர் எழுதினார். அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது மற்றொருவர் முகநூலில் எழுதி உள்ளார்.