இப்படி ஒரு கார் விற்பனைக்கு வந்த ஒரு பைசா செலவு இருக்காது’ என கூறுமளவிற்கு முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே வழங்கும் வகையில் ஓர் எலெக்ட்ரிக் காரை மாணவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.
மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக மின் வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது என்று கூறலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது சாலையில் அதிகளவில் மின் வாகனங்கள் தென்பட தொடங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் இப்படி ஓர் மின்சார கார் விற்பனைக்கு வந்தால் சூப்பரா இருக்கும் என்று கூறுமளவிற்கு ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தை மாணவர்கள் சிலர் கூட்டாக உருவாக்கியிருக்கின்றனர்.
டட்ச் நாட்டைச் சேர்ந்த மாணவர்களே மின்சாரத்தால் இயங்கும் காரை உருவாக்கியவர்கள். இதனை சார்ஜ் செய்ய சார்ஜிங் மையம் என்ற ஒன்றே தேவையில்லாத வகையில் மாணவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.
காரில் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்ய ஏதுவாக, காரின் மேற்கூரையை சோலார் பேனல்களால் கட்டமைத்திருக்கின்றனர். ஆகையால், பேட்டரியை சார்ஜ் செய்ய சூரிய ஒளி ஒன்று மட்டும் இருந்தால் போதும்.
எனவே காரை சார்ஜ் செய்யும் செலவும் ஒட்டுமொத்தமாக மிச்சம். அதேவேலையில், இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 730 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.
ஆகையால், அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இருக்காது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு பயணிக்க தொடங்கினால் எந்தவொரு கவலையும் இன்றி தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருக்கலாம்.
ஆனால், மழை காலத்தில் இதன் நிலைமை எப்படி என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. ஆம், மேக மூட்டமாக இருக்கும், சூரிய ஒளி அல்லாத நாட்களில் மட்டுமே இவ்வாகனத்திற்கு சார்ஜிங் மையத்தின் உதவி தேவைப்படுகின்றது.
அதுவே, வழக்கமான நாட்களில் சார்ஜிங் மையத்தின் உதவியே இல்லாமல் 730 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய சிறப்புமிக்க பேட்டரி வாகனத்தையே மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கின்றது. இவ்வாகனத்திற்கு மாணவர்கள் குழு ‘ஸ்டெல்லா விடா இவி’ (Stella Vita EV) எனும் பெயரை வைத்திருக்கின்றனர்.
ஸ்டெல்லா விடா இவி ஓர் மோட்டார் ஹோம் ரக வாகனமாகும். ஆம், இதனை மாணவர்கள் ஓர் சிறிய வீட்டைப் போன்று உருவாக்கியிருக்கின்றார். ஆகையால், இவ்வாகனத்தை உல்லாச பயணங்களின்போது கேம்ப் வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதில் ஷவர், தொலைக்காட்சி பெட்டி, லேப்டாப்பை சார்ஜ் செய்யும் வசதி மற்றும் காஃபி மேக்கர் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.
இத்துடன் படுக்கை, சிறிய லிவிங் ரூம் பகுதி, சமையலறை, அத்தியாவசிய பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவான ஸ்டோரேஜ் பாக்ஸ், சிறிய சோஃபா, மேசை, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சிலவும் ஸ்டெல்லா விடா இவியில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய வசதிகளுடன் ஓர் மின்சார வாகனம் காட்சிக்குள்ளாவது இதுவே முதல் முறை ஆகும்.
ஆகையால், ஸ்டெல்லா விடா இவி மின்சார வாகனத்தை உருவாக்கிய மாணவர்களுக்கு டட்ச் நாட்டு மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இத்துடன், உலகளவில் மின் வாகன பிரியர்கள் மத்தியில் இருந்தும் அவர்களுக்கு பாராட்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கின்றது.
ஸ்டெல்லா விடா இவி மின்சார கேம்பர் காரில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கருவிகள், தங்களுக்கான மின்சாரத்தை சோலார் பேனல் வாயிலாக பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இவ்வாகனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்டெல்லா விடா இவி மின்சார கேம்பர் வாகனத்தை ஒட்டுமொத்தமாக 22 பேர் அடங்கிய மாணவர்கள் குழு உருவாக்கியிருக்கின்றது. எய்ந்தோவன் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை (Eindhoven University of Technology)ச் சேர்ந்த மாணவர்களே இவ்வாகனத்தை உருவாக்கியவர்கள் ஆவார்கள்.
இவர்கள் இந்த மின் வாகனத்தைக் கொண்டு எய்ந்தோவனில் (Eindhoven) தொடங்கி டாரிஃபா (Tarifa) வரை பயணித்திருக்கின்றனர்.
இப்பயணத்தின்போது மின்சார சார்ஜிங் மையத்தின் உதவியை நாடாமலே அவர்கள் ஒட்டுமொத்த பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.