இராமாயண தொடர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த மூத்த நடிகர் அரவிந்த் திரிவேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ராமானந்த் சாகர் புராண நிகழ்ச்சியான ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் அரவிந்த் திரிவேதி நேற்று இரவு காலமானார்.
82 வயதான மூத்த நடிகர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மாரடைப்பு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பால் நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ராமாயணம் மட்டுமல்ல, நடிகர் விக்ரம் அவுர் பீடாலிலும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமூக மற்றும் புராண கதைகளை உள்ளடக்கிய இந்தி மற்றும் குஜராத்தி உட்பட 300 படங்களில் நடித்துள்ளார்.
இவர் 1991 இல் லோக்சபாவுக்கு உறுப்பினராக சபர்காந்தா தொகுதியில் இருந்து பா.ஜ.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் வால்மீகியின் காவிய ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபலமான தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்த நிகழ்ச்சி உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இந்நிலையில், அவருடைய இறப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய மறைவிற்கு பாஜக தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.