கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரதம மந்தியின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீடு பெறலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள், வீடுதோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்தவர்கள் என அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் இந்த காப்பீடு பலனை பெறலாம் என மகளிர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தாலோ அல்லது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போது விபத்து நேரிட்டாலோ அவர்கள் ரூ.50 லட்சம் காப்பீடு தொகையை பெற முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 13.29 அங்கன்வாடி ஊழியர்களும், 11.79 உதவியாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் யாரெல்லாம் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டனர் என்பதை மாவட்ட நிர்வாகம் கணக்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கன்வாடி ஊழியர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவ தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.