மனிதர்கள் சமையல் செய்து பார்த்து இருப்பீர்கள், விலங்குகள் செய்து பார்த்து இருக்கிறீர்களா? அதுவும் ஒரு நாய் வாழைப்பழ கேக் ஒன்றினை தயார் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சமையலை செய்வதே பெரிய காரியம். அதிலும் ஒழுங்காக கற்று கொண்டு சிறப்பாக செய்வது அதைவிட பெரிய காரியம் ஆகும். எந்த உணவு செய்தாலும் இது பொருந்தும். உங்களுக்கு வாழைப்பழ பாம்கேக்குகள் எப்படி செய்வது என்று தெரியுமா ? கவலையே இல்லை.
சுவையான வாழைப்பழ பாம்கேக்கை எப்படி செய்வது என்று நாய் உங்களுக்கு சொல்லு கொடுக்கிறது. எப்படி இந்த நாய் கேக்கினை தயார் செய்கிறது என்ற ஆச்சரியம் இந்த வீடியோவினை பார்க்கும் அனைவருக்கும் இருக்கிறது. நாய் செப் அணிந்திருக்கும் தொப்பியினை அணிந்து செய்வதை பார்க்கும் போதே , நாய் ஏதோ ஒரு உணவை சமைக்க போகிறது என்று தெரிகிறது.
அதுவும் கேக்கை அசால்ட்டாக செய்கிறது. இந்த வீடியோவை பார்த்து நாம் கூட கேக் எளிதாக கற்றுக்கொள்ளலாம் போல் இருக்கிறது. அந்த அளவுக்கு எளிமையாக இந்த நாய் வாழைப்பழ பாம்கேக்கை செய்கிறது. இந்த வைரல் வீடியோவை இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் வரும் நாயின் பெயர் ‘நக்கெட்கோ’. விளையாடுவது, குளிப்பது, முடி வெட்டுவது, ஓடுவது, தூங்குவது என இந்த நாய் அன்றாடம் செய்யும் குறும்புத்தனமான சேட்டைகளை ‘நக்கெட்கோ’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் உரிமையாளர் ஷேர் செய்து வருகிறார்.
இந்த நாயின் குறும்புத்தனமான செயல்கள் அடங்கிய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு நாய் கேக் தயாரிப்பது வித்தியாசமானது” என்றும், கேக்கை இவரிடமே கற்றுக்கொள்ளலாம் என்றும், இன்னும் சிலரோ நாய் செய்த கேக்கை சாப்பிடுவது இன்னும் வேடிக்கையானது என்றும் கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இதனிடையே நாய், பூனை இருக்கும் மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. நாய்களும் பூனைகளும் எதிரிகள். அது இரண்டும் சண்டையிட்டு கொண்டே இருக்கும் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மனிதர்கள் மட்டும் தான் எதிரியாகவும், நண்பர்களாகவும் இருக்க முடியுமா, விலங்குகள் இருக்க முடியாதா? என கேள்வி எழுப்பும் வகையில் இவை இரண்டும் ஒன்றாக இருக்கிறது.
இந்த வீடியோ ஒரு நாய்க்கும், பூனைக்கும் இடையே உள்ள அன்பினை காட்டுகிறது. வீடியோவில் நாயும், பூனையும் ஒன்றாக அமர்ந்து இருக்கிறது. விளையாடி கொண்டே பூனை நாயின் முகத்தினை நக்குகிறது.
இந்த அன்பினை படம் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர, வைரல் செய்தியானது. அவ்வப்போது விலங்குகள் செய்யும் சேட்டைகளும் மக்களை ரசிக்க வைத்து வருகிறது என்பது இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.