கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.45,000-க்கு வாங்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கோமகி எலக்ட்ரிக் வாகனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது மின்சார ஸ்கூட்டரான ‘கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1’ -ஐ அறிமுகப்படுத்தியது. இப்போது அந்நிறுவனம் விலை மாற்றியுள்ளது.
அதன்படி, லித்தியம் அயன் பேட்டரியுடன் ரூ.60,000 மற்றும் ஜெல் பேட்டரியுடன் ரூ .45,000 விலைக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
அதன் மாடல் XGT-X1ன் 25,000 யூனிட்களுக்கு மேல் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கோமகி XGT-X1 மாடலில் டெலிஸ்கோபிக் ஷாக்கர்ஸ், திருட்டினை எச்சரிக்கும் லாக் சிஸ்டம், ரிமோட் லாக், அட்வான்ஸ் பிரேக் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் அப்டேட் செய்யப்பட்ட சென்சார், பெரிய டேஷ்போர்ட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
கோமகி அதன் லித்தியம் அயன் பேட்டரிகளில் 2+1 (1 ஆண்டு சேவை உத்தரவாதம்) ஆண்டுகள் மற்றும் அமில பேட்டரியில் 1 ஆண்டு வாரண்டியும் வழங்குகிறது.
கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1 நிறுவனம் இந்த ஸ்கூட்டரை ‘ஐக்யூ’ சிஸ்டம் என்று அழைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாமல் 120 கி.மீ வரை பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இதன் BIS சக்கரங்கள் நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும் என உறுதி அளித்துள்ளது.
கோமகி XGT-X1ன் மாதிரியை உருவாக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டன. தற்போது சந்தையில் இதனை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கோமகியின் முதன்மையான நோக்கம் மலிவு விலையில் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் பைக் தருவது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுப்புற சூழலை பாதிக்கும் நிலையில், இதன் மூலம் பெட்ரோல் மற்றும் மாசு எந்த விதத்திலும் இல்லாத, சுற்றுசூழலுக்கு தீங்கில்லாமல் உருவாக்கி உள்ளோம்.
உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மின்சார வாகனங்கள் உருவாக்குவது கட்டாயமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் மின்சார வாகனங்களுக்கு மாற தொடங்க வேண்டிய நேரம் இது.
கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் சார்ஜ் செய்யும் கட்டமைப்புகள் உருவாகிவிடும். அப்பொழுது நம் சாலைகளில் மின்சார வாகனங்களை அதிகளவில் பார்ப்போம்’ என்று கோமகி மின்சாரப் பிரிவின் இயக்குநர் குஞ்சன் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாம் லிட்டருக்கு 100 ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தும் போது, மிக குறைந்த விலையில் அதிக தூரம் பயணம் செய்யலாம்.
ஓலா,ஹீரோ எலெக்ட்ரிக்கின் ஹீரோ எலக்ட்ரிக் ப்ளாஷ் எல்எக்ஸ், ஏவோலெட், ஆம்பியர் REO பிளஸ் போன்ற மின்சார ஸ்கூட்டர்கள் உருவாகி விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ் 1 வாகனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.