December 8, 2024, 1:46 AM
26.8 C
Chennai

வீட்டிருக்குள் நுழைந்து கரடி அட்டகாசம்! அச்சத்தில் உறைந்த குடும்பம்!

bear
bear

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஒரு குடியிருப்புக்குள் கரடி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் அதிகமாக கரடிகள் காணப்படும். எனினும் குடியிருப்புக்குள் அவை நுழைந்ததில்லை.

இந்நிலையில், Fort McMurray என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்புகளுக்கு கரடி நுழைந்திருக்கிறது. அந்த குடியிருப்பில் Sean Reddy என்ற நபர், தன் மகன்கள் 4 பேருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் மகன்கள் இருவருடன் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். தங்கள் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு கரடி நடமாடிக் கொண்டிருப்பதை Sean Reddy பார்த்திருக்கிறார்.

எனவே, அந்த கரடி திரும்பி காட்டிற்குள் சென்று விட்டதா? என பார்ப்பதற்காக குடியிருப்பிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அங்கு கரடி இல்லாததால், அது காட்டிற்குள் சென்றுவிட்டது என்று கருதியிருக்கிறார்.

அப்போது அவரின் இளைய மகன் ஓடிவந்து, அப்பா, நம் வீட்டில் கரடியின் கீறல்களுக்கான தடம் உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்த சில நொடிகளில் அவரின் மூத்த மகன் ஓடிவந்து, அப்பா, வீட்டிற்குள் கரடி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ALSO READ:  ‘ரெட் ஜெயண்ட்’ படத்தை வெளியிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!
bear 2
bear 2

இதனால், மூவரும் வீட்டினுள் சென்று பார்க்கும்போது, ஒரு பெரிய கரடி நின்றுகொண்டிருந்துள்ளது. அக்கரடி, ஜன்னலில் இருந்த கம்பியை உடைத்துவிட்டு உள்ளே புகுந்திருக்கிறது.

மேலும், அது வீட்டையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. எனவே, Sean Reddyயும் அவரின் மகன்களும் அதிர்ந்து விட்டனர். அதன்பின்பு, கரடி வெளியே வராதவாறு வழியெல்லாம் பொருட்களை போட்டு வைத்துள்ளனர். கரடி வந்த பாதையிலேயே அதனை அனுப்பிவிட முயற்சி செய்துள்ளார்கள்.

அதன்படி, கரடியும் வந்த வழியிலேயே வீட்டிலிருந்து வெளியேறி விட்டது. ஆனால் உடனடியாக காட்டிற்கு செல்லாமல், சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்துள்ளது. அதன் பின்பு தான் காட்டிற்கு சென்றுள்ளது. எனவே, Sean Reddy, இது போல் இதற்கு முன் நடந்ததில்லை, இனிமேல் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...