
திருமணத்துக்கு தயாராகும் மணமகள் மாப்பிள்ளையை வெயிட் பண்ண சொல்லுங்கன்னு என்று கூறிவிட்டு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் நாள்.. மணமக்களுக்கு மறக்க முடியாத நாளாகும். திருமண நாளில் அந்த திருமண வீடே ஒரே பரபரப்பாக இருக்கும். இருவீட்டாரும் காலில் சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டது போல் ஓடுவார்கள். இரவெல்லாம் நண்பர்களுடன் அரட்டை அடித்த மணமக்கள் முகூர்த்தத்திற்கு பரபரப்பாக கிளம்புவார்கள். இதில் மண்பெண்கள் குறித்து கேட்கவே வேண்டாம். அன்றைய ஹீரோயினே அவர்கள்தான். அதனால் மேக்கப் எல்லாம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். கைகளுக்கு மருதாணி, சிகை அலங்காரம் செய்வது என படு பிஸியாக இருப்பார்கள். இந்த அவசர கதியில் சிலருக்கு சாப்பிடவே நேரம் இருக்காது.
இந்திய மணப்பெண் ஒருவர் நமக்கு சோறுதான் முக்கியம் மாப்பிள்ளையை கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா எனக் கூறி மேகியை வெளுத்துக்கட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணப்பெண் ஒருவர் ரவிக்கை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கழுத்தில் திருமண நகைகளை அணிந்துள்ளார். சிகையலங்காரம் செய்பவர்கள் அந்த பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்துக்கொண்டிருக்க மணமகள் மேகியை ருசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த பெண் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்க. எனக்கு பசிக்கிறது.. மாப்பிள்ளை எனக்காக காத்திருக்கிறாரா என பதிலளிக்கிறார்.
மாப்பிள்ளை எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் எனக் கேட்க. அரை மணிநேரம் இல்லை இல்லை ஒரு மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
http://www.instagram.com/embed.js