
யானைகள் இயல்பாகவே மிகவும் புத்திசாலியான மிருகங்கள்.
அதனால் தான் டைனோசரின் காலம் தொட்டு இன்று வரையும் பல்வேறு மனித இடையூறுகளுக்கு மத்தியிலும் உயிர் வாழ்ந்து வருகிறது.
காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் போடப்படும் நெடுஞ்சாலைகள் வன உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சாலைகளை கடக்கும் போது வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் எண்ணற்ற உயிரினங்கள் பலியாகின்ற அவலமும் இங்கே அரங்கேறுகிறது.
பாலங்கள் போல உருவாக்கி பாலங்களின் மேலே கார்கள் போன்ற வாகனங்கள் செல்லவும், பாலங்களுக்கு கீழே விலங்குகள் செல்லும் வகையிலும் சாலைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெஹராடூனுக்கும் ஹரித்வாருக்கும் இடையே, சில்லா – மோத்திசூர் காரிடரில் வரும் தேசிய நெடுஞ்சாலை எண் 72-ல் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் கீழே யானை நடந்து வரும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த பாலம் உருவாக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் கூறிக் கொள்வதோடு, அருகில் இருக்கும் சாலையை உடனே அப்புறப்படுத்தி இருந்தால் பாலத்தின் பலன் முழுமையாக யானைக்கு கிடைத்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.