
உலகளவில் உள்ள வாட்ஸ்அப் யூஸர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எளிதான மெசேஜிங் சர்வீஸாக இருக்கும் வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட்ஸ் எனப்படும் குரல் செய்தி (வாய்ஸ் மெசேஜ்) அம்சமானது, பிற யூஸர்கள் மற்றும் குரூப் மெம்பர்களுடன் மிக எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது.
அனைத்து வாட்ஸ்அப் யூஸர்களாலும் இது எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்பட முடியாவிட்டாலும் வேலைகளில் பிஸியாக இருக்கும் நேரங்களில் டைப் செய்து மெசேஜ் அனுப்ப முடியாத போது, நெரிசலான பயணங்களின் போது, விரைவாக தகவல்களை பெற வேண்டியிருக்கும் போது WhatsApp-ன் வாய்ஸ் மெசேஜ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
இருப்பினும் நீங்கள் சில நேரங்களில் ஹெட்ஃபோன்கள் இல்லாத சூழலில் இருக்கும் போது, அலுவலகத்தில் இருக்கும் போது அல்லது நள்ளிரவில் அருகில் உறங்கி கொண்டிருக்கும் நபரை வாய்ஸ் மெசேஜ் கேட்பதால் தொந்தரவு செய்ய விரும்பாத போது என பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது நண்பர்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது குரூப்பிலோ அனுப்பி இருக்கும் வாய்ஸ் மெசேஜ்களை உடனடியாக கேட்க முடியால் போகலாம். ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒருவர் அனுப்பி வைத்திருக்கும் வாய்ஸ் மெசேஜை நீங்கள் டிரான்ஸ்க்ரைப் (transcribe) செய்து கொள்ளலாம்.

அதாவது வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்ஸ்களை டெக்ஸ்ட்டாக மாற்றி கொள்ளலாம். வாய்ஸ் மெசேஜை டிரான்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் அந்த மெசேஜில் ஆடியோ வடிவில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அது அபப்டியே நமக்கு டெக்ஸ்ட் வடிவில் தெரியும் என்பதே இதன் சிறப்பம்சம்.
எனவே ஹெட்ஃபோன் இல்லாமல் வாய்ஸ் மெசேஜை எப்படி கேட்பது அல்லது வாய்ஸ் மெசேஜை கேட்க கூடிய சூழலில் நாம் இப்போது இல்லையே என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம்.
வாய்ஸ் மெசேஜ்களை டிரான்ஸ்க்ரைப் செய்து கொள்ளும் அம்சம் WhatsApp-ல் இல்லை என்றாலும், தேர்ட் பார்ட்டி டூல் மூலம் இது சாத்தியம். Transcriber for WhatsApp என்ற இந்த டூல் இப்போது பீட்டாவில் வெர்ஷனில் இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்க்கலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று Transcriber for WhatsApp (Early Access) என்ற App-ஐ முதலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்னர் இதை ஓபன் செய்தால் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை மட்டுமே கண்டறியும் வகையில் இருக்கும்.
தமிழ் உட்பட வேறு எந்த மொழியையும் இந்த App கண்டறிய செட்டிங்ஸ் சென்று கொடுக்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு தேவையான மொழியை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
வாய்ஸ் மெசேஜ் இருக்கும் வாட்ஸ்அப் சேட்டிற்கு சென்று தேவைப்படும் வாய்ஸ் மெசேஜை லாங் பிரஸ் செய்தால் அது செலக்ட் ஆகும். பின்னர் வாட்ஸ்அப்பின் வலது மூலையில் காணப்படும் மூன்று புள்ளிகளை டேப் செய்தால் அதில் ஷேர் என்ற ஆப்ஷன் காட்டும். அதையும் டேப் செய்தால் ஸ்கிரீனில் தோன்றும் Transcriber for WhatsApp என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். பின்னர் ஓபன் ஆகும் அந்த குறிப்பிட்ட App காட்டும் இரு ஆப்ஷன்களில் Transcribe என்ற முதல் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.
ப்ரீமியம் யூஸர்களுக்கு மட்டுமே விளம்பரம் தோன்றாது என்பதால் ஸ்கிரீனில் தோன்றும் விளம்பரம் முடியும் வரையோ அல்லது அதை க்ளோஸ் செய்யும் ஆப்ஷன் வரும் வரையோ காத்திருக்க வேண்டும்.
விளம்பரத்திற்கு பின்னர் குறிப்பிட்ட வாய்ஸ் மெசேஜில் ஒரு யூஸர் என்ன பேசி இருக்கிறாரோ அது அப்படியே டெக்ஸ்ட் வடிவில் சிறிய பாக்ஸ் ஒன்றில் தெரியும். மிகவும் பயனுள்ள இந்த App-ஐ (Transcriber for WhatsApp) நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.