கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. இந்த ஆப்-களில் பெரும்பாலானவை தீம்பொருள் (மால்வேர்) வைரஸ்களை கொண்டவை.
மொபைல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், சைபர் குற்றவாளிகள் இந்த தளங்களை மக்களை தவறாக வழிநடத்த எளிதான வழிமுறையாக மாற்றி உள்ளனர்.
ஆனால் இதுபோன்ற தீங்கிழைக்கும் செயலிகளுக்கு இரையாகாமல் உங்களை பாதுகாத்துக் கொள்ள, iOS மற்றும் Android இயங்குதளங்களில் போலி ஆப்-களை அடையாளம் காண உதவும் சில எளிய முறைகளை தற்போது பார்க்கலாம்.
எந்தவொரு மொபைல் ஆப்-ஐயும் உங்கள் போனில் நிறுவும்முன், அதன் டெவலப்பர்கள் மற்றும் எடிட்டர்களின் விவரங்களில் கவனம் செலுத்த மறக்காதீர்கள்.
இது தவிர, ஆப்-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலமும் தகவல்களை பெறலாம். இது போலியான செயலிகளை பதிவிறக்குவதில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
எந்த செயலியை நிறுவும் முன், அந்த ஆப் எத்தனை முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும். உண்மையான ஆப்-கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான முறை பதிவிறக்கம் செய்யப்படும்.
அத்தகைய சூழ்நிலையில், அது போலி ஆப்-ஆக இருந்தால், அதன் பதிவிறக்க எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
பொதுவாக கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களை தேடும்போது, ஒத்த பெயர்களை கொண்ட பல செயலிகளை நீங்கள் காணலாம்.அவற்றில் நிறைய போலியான ஆப்கள் உள்ளன. அவற்றில் எழுத்துப்பிழை அல்லது ஐகானில் ஏதேனும் தவறு இருந்தால், அதை பதிவிறக்க வேண்டாம்.
செயலியின் வெளியீட்டு தேதியை சரிபார்ப்பது அவசியமாகிறது. உண்மையான ஆப் பொதுவாக ‘புதுப்பிக்கப்பட்ட’ தேதியை காட்டுகிறது. அந்த ஆப், உங்களிடமிருந்து என்ன அனுமதிகளை கேட்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அந்த செயலி ஆடியோ மற்றும் பலவற்றை அணுகும்படி கேட்டால், அனுமதிகளைத் தவிர்ப்பது நல்லது.