
கொளத்தூர்லகூட வெள்ளத் தண்ணிய வெளியேத்த முடில… என்று தமிழக முதலமைச்சர் மு.க.சுடாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கம்போல் பிரச்சினைகளை திசை திருப்ப மொழி அரசியலையும் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் மீதான தாக்குதல்களை தொடுக்கும் கிறிஸ்துவ அஜெண்டாவுடன் கூடிய திராவிட அரசியலை கையிலெடுத்துள்ள சுடாலின், தைப்பொங்கல் திருநாளே தமிழ் புத்தாண்டு எனும் விதத்தில் களம் இறங்கியிருக்கிறார். சுதந்திர தினம் என்று என்றுகூடத் தெரியாத சுடாலினுக்கு ‘தைப் பொங்கல் அரசியல்’ ஒரு கேடா என்ற குரல்கள் சமூகத் தளங்களில் ஒலிப்பதைக் காண முடிகிறது.
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தயாரிக்கப்பட்ட பைகளின் மாதிரி வெளியாகி உள்ளது. அவற்றில் ‘தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் தை பொங்கல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டு நாள் என்று மாற்ற அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ‘ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்.14 சித்திரை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹிந்து மதத்தை பின்பற்றுகிற மக்கள் மட்டுமல்ல; அனைத்து தமிழர்களுமே தமிழ்ப் புத்தாண்டை நல்ல காரியங்கள், தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாளாகக் கருதி, மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது திமுக., அரசு வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து தமிழ்ப் புத்தாண்டு நாளை குழப்பி கொண்டிருக்கின்றனர்.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக., அரசு கொண்டாடும் போலும்! ஏற்கெனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, இதுபோல் தை முதல்நாள் புத்தாண்டு என்று திமுக., அரசு சார்பில் சட்டம் கொண்டு வந்ததும், தொடர்ந்து வந்த அதிமுக., ஆட்சியில் ஜெயலலிதா அதனை நீக்கி, மீண்டும் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டுவந்ததும் வரலாறு.
இனி அடுத்து பாஜக., ஆட்சிக்கு வரும், வந்து மீண்டும் இவர்களின் முயற்சிகளை எல்லாம் மாற்றும், அதற்குத்தான் திமுக.,வினர் வழி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.