
பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ என்கிற உயரிய விருதை அளிப்பதாக பூடான் அரசு அறிவித்திருக்கிறது.
இதைப் பகிர்ந்துகொண்ட அந்நாட்டு பிரதமர் மோடியின் பெயர் விருதிற்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பூடான் சென்ற மோடி ‘இந்தியாவும் – பூடானும் இயல்பான நட்பு நாடுகள் என்றும் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்றை புரிந்துகொண்டு பகிர்ந்துகொள்வதைப் போல் உலகில் வேறு எந்த 2 நாடுகளும் இல்லை’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.