இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் UPI ஆப்ஸ் மூலமாக நெட்பேங்கிங் செய்யும் வசதிகள் பெரியளவில் மேம்பாட்டு வந்தாலும் கூட, பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுடைய ATM பின் இன்னும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதெல்லாம், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, சில ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் ATM பின்னைப் பயன்படுத்திய பிறகே உங்களின் பரிவர்த்தனையை முழுமையாக அனுமதிக்கப்படுகின்றன.
மிக முக்கியமான ATM பின் நம்பரை மறந்துவிட்டால் என்னவாகும்?
இப்படி மிக முக்கியமான ATM பின் நம்பரை நீங்கள் மறந்துவிட்டால் என்னவாகும். ஒருவேளை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
முதலில் நீங்கள் உங்களுடைய ATM பின் நம்பரை மறந்துவிட்டால் கவலைப்படாதீர்கள், இதற்காக நீங்கள் நேரடியாக வங்கிக்குச் சென்று புதிய PIN நம்பர் வேண்டும் என்று விண்ணப்பிக்க நீளமான வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாகவே உங்களுக்கான புதிய ATM PIN நம்பரை நீங்கள் உருவாக்கலாம்.
குறிப்பாக, நீங்கள் ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் என்றால், உங்களுக்கு வேலை இன்னும் எளிமையாக முடிந்துவிடும். குறிப்பாக உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் வங்கி உடன் இணைத்திருந்தால் மொபைல் அல்லது நெட் பேங்கிங் அல்லது SMS மூலமாக உங்கள் பின் நம்பரை மாற்றி அமைக்கலாம்.
அதுவும் நீங்கள் உங்களுடைய வங்கி கிளைக்கு நேரில் செல்லாமலேயே புதிய எஸ்பிஐ ஏடிஎம் பின்னை மாற்றவோ அல்லது உருவாக்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களின் மையமாக உள்ளது. ஒருவேளை உங்களிடம் ஒரு SBI கார்டு இருந்து, உங்களின் ஏடிஎம் கார்டின் பின்னை மறந்துவிட்ட நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் சூழ்நிலையை மாற்றக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
ஏடிஎம் பின்னைச் சரியாக உள்ளீடு செய்த பிறகு நீங்கள் வழக்கம் போல் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம்.
உங்கள் எஸ்பிஐ ஏடிஎம் பின்னை மறந்துவிட்டாலோ அல்லது நீண்ட நாட்களாகியும் ஏடிஎம் பின்னை மாற்றாமல் இருந்தாலோ, பாதுகாப்பு காரணங்களுக்காக அதை மாற்ற நினைத்தாலோ நெட்பேங்கிங் ஆன்லைன் மூலம் அனைத்தையும் நீங்கள் சில நிமிடங்களில் மாற்றி அமைக்கலாம்.
அதை மாற்ற, உங்களின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஐடிகளுடன் இணைக்கப்பட்ட எஸ்பிஐயின் நெட்பேங்கிங் வசதி இருந்தால் மட்டும் போதும். சரி, இப்போது நெட்பேங்கிங் முறைப்படி எப்படி உங்களுடைய ATM பின் நம்பரை மாற்றம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஏடிஎம் பின்னை உருவாக்க மற்றும் மாற்றங்களை மேற்கொள்ளக் கீழ் கட்டப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும்.
முதலில் onlinesbi.com என்ற இணையதளத்திற்குச் சென்று பார்வையிடவும்.
இங்கு உங்களுடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
இ-சேவைகள் மெனுவிலிருந்து, “ஏடிஎம் கார்டு சேவைகள் (ATM Card Services)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சுயவிவர கடவுச்சொல் இருந்தால் அல்லது இல்லையென்றால் இதை செய்யுங்கள்
கீழ் தோன்றும் மெனுவிலிருந்து “ATM PIN Generation” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களிடம் சுயவிவர கடவுச்சொல் இருந்தால் “Using Profile Password” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் சுயவிவர கடவுச்சொல் உங்களுக்குத் தெரிந்தால், பரிவர்த்தனைகளை விரைவாக முடிக்க அதைப் பயன்படுத்தலாம்.
அல்லது “Using One Time Password (OTP)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP)” எனில் சுயவிவர கடவுச்சொல் இல்லை என்றால், OTP உங்கள் ஃபோன் எண்ணுக்கு அனுப்பப்படும்.
உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க, பொருத்தமான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கைத் தேர்வு செய்யவும்.
உங்கள் சுயவிவரத்துடன் தொடர்புடைய செயலில் உள்ள கார்டுகளின் பட்டியல் காட்டப்படும்.
பின்னை மாற்ற விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய பின்னை உள்ளிட்டு, அதை மீண்டும் உள்ளிட்டு இருமுறை சரிபார்க்கவும்.
ஆன்லைன் பேங்கிங் டிஸ்பிளேவிலும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும் உங்கள் பின்னைப் புதுப்பிப்பதற்கான உறுதிப்படுத்தலை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுடைய எஸ்பிஐ கணக்கிற்கான நெட்பேங்கிங் வசதி உங்களிடம் இல்லை என்றால் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
நெட்பேங்கிங் வசதி உங்களுக்கு இல்லை என்றால், நீங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் செல்லாமல் ஏடிஎம் பின்னை மாற்ற SBI ATM மையத்திற்கு செல்லலாம்.
அங்குள்ள ATM இயந்திரத்தில் உங்களுடைய எஸ்பிஐ ஏடிஎம் கார்டைச் செருகவும்.
ATM திரையில் காட்டப்படும் “PIN Generation” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் கணக்கு விவரங்களை உள்ளிடவும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
ஏடிஎம் திரையில் OTP ஐ பதிவிட்டு உறுதிப்படுத்தவும்.
அது உங்கள் ATM PIN ஐ மாற்ற அனுமதிக்கும்.
எஸ்எம்எஸ் மூலமாகவும் ஏடிஎம் பின்னை நீங்கள் மாற்றலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது என்றால் இந்த முறையைப் பின்பற்றுங்கள். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஏடிஎம் பின்னை மாற்ற அனுமதிக்கிறது.
உங்களுக்குத் தேவையானது எல்லாம் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்களுடன் கணக்கு விவரங்கள் மட்டுமே. உங்களிடம் ஏடிஎம் கார்டு, பாஸ்புக் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால் SMS மூலம் நீங்கள் உங்களுடைய ATM PIN நம்பரை மாற்றலாம்.
உங்கள் SBI ATM பின்னை உங்கள் வீட்டில் இருந்தபடியே புதுப்பிக்க, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணிற்கு அழைக்கவும். IVR மெனு உங்கள் 16 இலக்க SBI ATM கார்டு எண்ணையும், உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணையும் உள்ளிடும்படி கேட்கும்.
இரண்டையும் வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனில் OTP (ஒரு முறை கடவுச்சொல்) ஐ பெறுவீர்கள். OTPயைச் சமர்ப்பித்த பிறகு உங்கள் ATM பின்னைப் புதுப்பித்து IVR பரிவர்த்தனையை முடிக்கலாம்.
இப்படி மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி எளிமையாக வங்கிக்கே செல்லாமல் உங்களுடைய ATM PIN நம்பரை நீங்கள் மாற்றியமைக்கலாம்.