டோல் பிளாசாக்களில் உள்ள ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக பணம் செலுத்த ஃபாஸ்டாக் உதவுகிறது
இந்த பாஸ்ட் டேக் முறை இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் பாஸ்ட் டேக் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்போது நீங்கள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது பாஸ்ட் டேக் இன் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்வீர்கள். குறிப்பாக நீங்கள் நெரிசலான சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்கும் போது பாஸ்ட் டேக் இன் அருமை உங்களுக்குப் புரியும்.
இப்படி மிக முக்கியமான வாகன தேவை அட்டையாக மாறிப்போன பாஸ்ட் டேக் ரீசார்ஜ் முறையில் செயல்படுகிறது. இந்த அட்டையின் மூலம் உங்களுடைய சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உங்கள் அட்டையில் உள்ள இருப்புத் தொகை தீர்ந்த பின், நீங்கள் அந்த தொகையை மீண்டும் ரீசார்ஜ் செய்து உங்கள் பாஸ்ட் டேக் அட்டையின் தொகையை அப்டேட் செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது உங்கள் பாஸ்ட் டேக் அட்டையில் தொகை இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது தேவையற்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க உதவும்.
உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் செலுத்துவதன் மூலம் இதை நீங்கள் சுலபமாகச் செய்து முடிக்க முடியும். ஏற்கனவே, ஃபாஸ்டேக் சேவை 20 -க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் இணைந்து, இந்தியா முழுவதும் அதன் சேவையை வழங்கி வருகிறது.
நீங்கள் உங்கள் பாஸ்ட் டேக் அட்டையை இன்னும் சுலபமாக ரீசார்ஜ் செய்ய விரும்பினால், யுபிஐ ஆப்ஸ் அல்லது ஈ-வாலெட் வழியாகக் கூட ரீசார்ஜ் செய்ய முயலலாம்.
இப்போது நாம் எப்படி Google Pay, PhonePe, Paytm போன்ற UPI ஆப்ஸ் மூலமும் மற்றும் BHIM வழியாக எப்படி உங்களுடைய FASTag அட்டையை எளிமையாக சில நிமிடங்களில் ரீசார்ஜ் செய்யலாம் என்பதை காணலாம்.
ஏன், Google Pay, PhonePe, Paytm போன்ற UPI ஆப்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்வது சுலபமானதாக கருதப்படுகிறது. காரணம், இந்த ஆப்ஸ்களுடன் உங்களுடைய வங்கி கணக்குகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால், உங்களுடைய பரிவர்த்தனை மிக எளிதாகவும் சுலபமாகவும் சில செயல்முறைகளில் முடிந்துவிடுகிறது.
Google Pay ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
Google Pay ஐத் திறந்து மெயின் மெனுவில் உள்ள Business & Bills விருப்பத்தை கிளிக் செய்க.
இந்த மெனுவிலில் மேல் மூலையில் உள்ள Explore கிளிக் செய்யுங்கள்.
எல்லா விபரங்களையும் உள்ளிட்டு ரீசார்ஜ் செய்யுங்கள்
மேலே காணப்படும் சர்ச் டேப் இல் FASTag என்று டைப் செய்யுங்கள்.
ஃபாஸ்டாக் வழங்கும் வங்கிகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.
இதில் உங்களுக்கு FASTag வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.
கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, கட்டணத்தைச் செலுத்தி உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யுங்கள்.
Paytm ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
Paytm ஐத் திறந்து மெயின் மெனுவில் உள்ள Show more விருப்பத்தை கிளிக் செய்க.
மெனுவிலிருந்து, FASTag Recharge என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
உங்கள் ஃபாஸ்டாக் வழங்கும் வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.
கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து பணம் செலுத்துங்கள்.
PhonePe ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
PhonePe பயன்பாட்டைத் திறந்து FASTag Recharge ஐகானைக் கிளிக் செய்க.
FASTag வழங்கும் வங்கிகளின் பட்டியலிலிருந்து, உங்கள் ஃபாஸ்டாக் வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.
கார் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்யக் கட்டணம் செலுத்துங்கள்.
உங்கள் FASTag இப்போது ரீசார்ஜ் செய்யப்பட்டது.
BHIM ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
BHIM பயன்பாட்டைத் திறந்து முகப்புத் திரையிலிருந்து Send என்பதைத் தேர்வு செய்க.
NETC FASTag UPI ஐடியை உள்ளிடவும்.
உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய ரீசார்ஜ் தொகை மற்றும் பின்னை உள்ளிடவும்.
உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உடனடியாக ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் டோல் பிளாசாக்கள் வழியாக இனி வசதியாகப் பயணிக்கலாம். முக்கிய குறிப்பு, நீங்கள் ரீசார்ஜ் செய்த அடுத்த 20 நிமிடத்திற்கு பிறகே சில நேரங்களில் உங்களுடைய ரீசார்ஜ் செல்லுபடியாகிறது.
இது தொழில்நுட்ப லேக் (lag) காரணமாக நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், பயணம் செய்வதற்கு முன்பாகவே உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்வது எப்போதும் உங்களுக்கு நல்லது.