Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?காதைப் பிளக்கும் சத்தத்துடன் விழுந்த விண்கல்..! நாசா வெளியிட்ட செய்தி!

காதைப் பிளக்கும் சத்தத்துடன் விழுந்த விண்கல்..! நாசா வெளியிட்ட செய்தி!

- Advertisement -
- Advertisement -

அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்திருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

சூரியமண்டலத்தில் கோள்களை தவிர பிரம்மாண்ட விண்கற்களும் சூரியனை சுற்றி வருகின்றன. சில நேரங்களில் அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு வளிமண்டலத்திற்குள் நுழையும்.

வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அடர்த்தி காரணமாக, அவை வேகமாக பயணிக்கும் போது தீப்பிடிக்கவே வாய்ப்பு அதிகம். இதனால் விண்கற்கள் பூமியின் தரைப்பரப்பை தொடுவது மிகவும் அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும், பூமியில் கடற்பரப்பு அதிகமாக இருப்பதால் இப்படியான விண்கற்கள் பெரும்பாலும் கடலிலேயே விழும். ஆனால், அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியில் ஒரு விண்கல் விழுந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்களை சேர்ந்த மக்களில் சிலர் 29 அன்று காலை சுமார் 8 மணி அளவில் காதை பிளக்கும் அளவுக்கு சத்தம் கேட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதற்கு அதிவேகத்தில் வந்து விழுந்த விண்கல் தான் காரணம் எனத் தெரிவித்திருக்கிறது நாசா.

ஆராய்ச்சியாளர்கள் இதனை bolide என்று அழைக்கிறார்கள். 90 பவுண்ட் எடையும் ஒரு அடி அகலமும் கொண்ட இந்த கல் மணிக்கு 55,000 மைல் வேகத்தில் வந்து விழுந்திருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது.

லூசியானா மாகாணத்தின் மினோர்க்கா பகுதியில் விழுந்த இந்த கல் மூன்று டன் TNT ஏற்படுத்தக்கூடிய பலத்த சத்ததினை ஏற்படுத்தியதாகவும் விழுந்த சில நிமிடங்களில் 10 முழு நிலவுகளின் வெளிச்சத்தை தோற்றுவித்ததாகவும் நாசா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்,” 29 அன்று காலை ஆரஞ்சு நிறத