IMG 20220502 WA0031 - 2026

இதுக்கு பேர் அதான் குரங்கு சேட்டைங்கோ..

அடடே... அப்படியா?

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வாட்டி எடுக்கும் கோடை வெயில் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கும் போது விலங்குகளை விட்டுவைக்குமா என்ன..

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கவும் தாகத்தை தீர்க்கவும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வழக்கமாக உள்ளது. 

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும் கோடை வெயில் வாட்டி எடுத்தது.இந்த நிலையில் தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் வெயில் தாங்கமுடியாமல் அந்த பகுதியில் உள்ள வீட்டு மாடியில் ஏறி அங்கிருந்த குடிநீர் தொட்டியில் புகுந்து ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றது.

இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. குரங்கு சேட்டை பார்க்க ரசிக்கக்கூடியதாக இருந்தாலும் அதனால் வரும் பாதிப்பை தவிர்க்க இப்பகுதியில் அதிகமாக குரங்கு தொல்லைகள் இருப்பதை கட்டுப்படுத்த வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

IMG 20220502 WA0031 - 2026
IMG 20220502 WA0032 - 2026
ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.