
பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனது நாயைக் காப்பாற்ற எண்ணி கங்காருவிடம் மாட்டிக்கொண்ட ஒரு நபரது வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வைரல் ஆனது. தற்போது இதேபோன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு ஆஸ்திரேலிய நபர் தன்னை தாக்கும் முரட்டு கங்காருவிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள படாத பாடுபடுவதை காண முடிகின்றது.
கங்காருக்கள் பெரும்பாலும் ஆக்ரோஷமாக இருப்பதல்ல. ஆனால், இவற்றுக்கு தாங்கள் தாக்கபடுவதாக தோன்றிவிட்டால், இவை ஆக்ரோஷமாகிவிடும். இது தொடட்பான பல சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பகுதியில் உள்ள சிசிடிவியில் இந்த சம்பவம் பதிவாகியது. கிளிஃப் டெஸ் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபரை ஆக்ரோஷமான கங்காரு தெருவில் துரத்துகிறது.
அவர் தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவதை வீடியோவில் காண முடிகின்றது. ஓடும்போது தடுமாறிய அந்த நபர் தரையில் விழுகிறார்.
கங்காரு தொடர்ந்து அவரை தாக்கவே அவர் கங்காருவை நோக்கி ஒரு கொம்பை காண்பிக்கிறார்.
அந்த நபருக்கும் கங்காருவுக்கும் இடையில் கடுமையான சண்டை நடக்கிறது. பின்னர், அவர் WWE பாணியில் கங்காருவை கீழே தள்ளி விடுகிறார்.
கங்காருவுக்கும் அந்த நபருக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளியாகியுள்ளது.
உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசிய கிளிஃப், தனது தோட்டத்தில் கங்காரு தனது தனது நாய்களைப் பிடிக்க முயற்சிப்பதைக் கண்டு தான் அதை நிறுத்த முயற்சித்ததாகவும், அதன் பின்னர் அதனுடனான சண்டை துவங்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
ROO RUMBLE: A man has found himself squaring off with a kangaroo in New South Wales' Northern Rivers region. 🦘
— NBN News (@nbnnews) May 30, 2022
The man was able to pin down the large marsupial, but not without copping a few blows.#NBNNews | Nightly at 6pm pic.twitter.com/qYUWQfl5J1