- Advertisements -
Home அடடே... அப்படியா? விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

- Advertisements -

விவோ நிறுவனம் புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது

விரைவில் இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

- Advertisements -

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் HyperEngine 3.0 தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799
(இந்திய மதிப்பில் ரூ.21,000) ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை CNY 2,599 (இந்திய மதிப்பில் ரூ.30,300) ஆக உள்ளது. வரும் ஜூன் 6-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த சாதனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 7 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.