
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.
இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக தடை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது .
அதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது..
இதனிடையே இந்தியாவில் உள்ள புதிய ஐடி விதிகளின்படி, நாட்டில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட குறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்த மாதாந்திர அறிக்கைகளை வாட்ஸ்அப் வெளியிட்டு வருகிறது.
மேலும் இந்தியாவில் கலவரங்கள் உட்பட பல சட்டம் ஒழுங்கு சம்பவங்களுக்கு வழிவகுத்த தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புவதற்கான முக்கிய தளமாக வாட்ஸ்அப் மாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பிறகு, வாட்ஸ் அப் பயன்பாட்டை தவறான முறையில் பயன்படுத்துவனதை தடுக்க பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப்பில் உள்ள சிக்கல்களை புகாரளிக்க பயனர்களை ஊக்குவிப்பதுடன், போலிச் செய்திகள் மற்றும் ஸ்பேம் செய்திகளை பற்றி மக்களை எச்சரிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் எந்தவொரு பயனரும் அதன் “சேவை விதிமுறைகளை” மீறுவதைக் கண்டறிந்தால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் “சேவை விதிமுறைகளின்” படி, கீழ்கண்ட விஷயங்களை செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளம் மார்ச் மாதத்தில் நாட்டில் இதுபோன்ற 18 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் கணக்குகளை முடக்க என்ன காரணம்..?
நீங்கள் ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து மற்றொரு நபரின் போலி கணக்கை உருவாக்கினால், உங்களின் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்.
உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கு நீங்கள் அதிகமான செய்திகளை அனுப்பினால், உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.
WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தினால், உங்கள் கணக்கு தடை செய்யப்படலாம்..
பல பயனர்களால் உங்களை பிளாக் செய்தால், வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்படலாம்.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு எதிராக பலர் புகார் அளித்தால், வாட்ஸ்அப் உங்களைத் தடை செய்யலாம்
பயனர்களுக்கு மால்வேர் அல்லது ஃபிஷிங் இணைப்புகளை அனுப்பினால், உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.
வாட்ஸ்அப்பில் ஆபாச கிளிப்புகள், அச்சுறுத்தல் அல்லது அவதூறு செய்திகளை அனுப்ப வேண்டாம்
வாட்ஸ்அப்பில் வன்முறையை ஊக்குவிக்கும் போலி செய்திகள் அல்லது வீடியோக்களை அனுப்ப வேண்டாம்.