தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்று பழுது பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளக்கூடிய இந்த பணியின் நிமித்தம் அந்த மாவட்டங்களுக்கு மின்தடை ஏற்படும்.
அதன்படி எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் தடையாகும் என்ற தகவலையும் அந்தந்த மாவட்ட செயற்பொறியாளர்கள் முன்கூட்டியே வெளியிட்டு விடுகின்றார்கள்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வட்டார துணை மின் நிலையத்தில் வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது.
அதனால் மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான காரைக்குடி நகர் பகுதிகள் கோயம்பேடு ஹவுசிங் போர்டு, கோட்டை, பாரி நகர், ஆறுமுக நகர், மன்னர் கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்திருக்கின்றார்