ஆலங்குளம் தொகுதி கீழாம்பூரில் தீபாவளியை அடுத்த இரண்டு நாட்களில் அரசு சார்பில் மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பயனாளிகள் அனைவரும் வசதி படைத்தவர்கள். மேலும் அங்குள்ள அரசு அதிகாரி சிலரிடம் கையூட்டு பெற்று அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள்.
இந்தத் தொகுதி MLA திமுக-வை சார்ந்திருப்பதால் இது போன்று அரசு அதிகாரிகள் செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் அதிமுக – விற்கு வாக்களித்ததால் (மஞ்சபுளிபச்சேரி) ஒரு கிராமத்தையை ஒதுக்கி வைத்ததாக குற்றசாட்டு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரனை மேற்கொண்டு உரிய பயனாளிக்கு சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கொடுக்கப்பட்டுள்ள மனு மீது மாவட்ட நிர்வாகத்தின் நேரடி விசாரனைக்கு பின் பலன்களை அளிக்க வேண்டும் என்பது அந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கிராமத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்!
– தென்காசி செய்தியாளர்




