மார்ச் 1ம் தேதி நேற்று பல்வேறு சமூக நலத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க தமிழகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி! அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்ட வைகோ முன்னின்றார். பலர் கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கை பதிவு செய்ததாகவும், அது உலக அளவில் ஹிட் ஆகிவிட்டது என்றும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை தமிழகத்துக்கு வந்த மோடிக்கு எதிராக கோபேக் போட்டது சாதனை என்றும் சொல்லிக் கொண்டார்கள் ஊடகங்களில்!

இப்படி, கோ பேக் மோடி என்ற ட்விட்டர் பதிவு நேற்று பெரும்பாலானவர்களால் பகிரப்பட்டதாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலர் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் ட்விட்டர் பதிவின் அக்கவுண்டுகளை கொண்டு ஆழமாகப் பார்த்ததில் இந்தப் பதிவு பாகிஸ்தானிலிருந்து பெருமளவு பகிரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது

பாகிஸ்தான் இந்தியா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் பதிவு ஆக்கப்பட்டிருக்கிறது! இதில் பாகிஸ்தானில் இருந்து 58 சதவிகிதம் பேரும், இந்தியாவில் இருந்து 22 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 சதவிகிதம் பேரும் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்

குறிப்பாக கராச்சி நகரத்தில் இருந்து 13 %, லாகூரில் இருந்து 12 %, இஸ்லாமாபாத்தில் இருந்து 8 %,  லண்டனில் இருந்து 4%, சென்னையில் 4% மும்பை துபாய் இவற்றிலிருந்து 3 % டெல்லியில் 2 % சிட்னியில் இருந்து ஒரு சதவீதமும் என  பதிவாகி உள்ளது

குறிப்பாக ஆங்கிலத்தில் 62 சதவிகிதம் பேரும், உருது மொழியில் 23 சதவீதம் பேரும், தெலுங்கு மொழியில் 6 சதவீதம் பேரும், சோமாலியில் 4 சதவிகிதம் பேரும், தமிழில் வெறும் 2 சதவீதம் பேரும், ஹிந்தி மொழியில் ஒரு சதவீதம் பேரும் இந்த ட்விட்டர் பதிவினை பகிர்ந்து அவற்றில் கோபேக் மோடி என்ற ஆங்கில ஹேஷ்டேக்கை பதிவிட்டிருந்ததாக ட்விட்டர் கணக்கு கூறுகிறது!

ஆகவே இந்த டிவிட்டர் பதிவுகளில் கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக்குக்காக அதிகம் உழைத்தவர்கள் இஸ்லாமியர்களே!

இஸ்லாமிய நாடு தொடர்பும் மத தொடர்பும் சமூக வலைதளங்களில் அவர்களால் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது

தமிழில் வெறும் 2 சதவீதம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர். மேலும் உலக அளவில் 4 சதவீதம் பேரே கோபேக்மோடி என்ற ஹேஷ்டேகை பதிந்துள்ளனர்!

ஆனால் ஊடகங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் உலக அளவில்  டிரெண்ட் ஆகி வருவதாக செய்திகள் பரப்பப்பட்டன

மோடி தமிழகத்திற்கும் ஆந்திர பிரதேசத்திற்கும் வந்தபோது இந்த ஹேஷ்டேக்குகள் பிரபலமடைந்தன! ஆனால் இவற்றில் உலக அளவில் பாகிஸ்தானில் இருந்தும் இங்கிலாந்தில் இருந்தும் இந்தியாவில் மற்ற இடங்களில் இருந்தும் இந்த ஹாஷ்டேகுகள் பகிரப்பட்டு இருக்கின்றன என்பது முக்கியமான தகவல்

ஆனால் தமிழகத்தில் மோடிக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதுபோல் காட்டுவதாக ஊடகத்தினர் செய்திகளைப் பகிர்ந்தனர்.

ட்விட்டர்வாசிகளோ, ஊடகங்களே இந்த ஹேஷ்டேக் குறித்து அதிகம் செய்தி பகிர்ந்தன என்றூம், சாதாரண மக்களும் டிவிட்டர்வாசிகளும் அவற்றைப் பெரிது படுத்தவில்லை என்றும் கூறுகின்றனர்!

ஆனால், இந்த 4 சதவீதம் என்பதும் கூட, பாகிஸ்தானின் உந்துதலில் ஏற்பட்ட பதிவுகள் என்பதால், இது தீர விசாரிக்கப்பட வேண்டியவை என்றும்,  இந்த ஹேஷ்டேக் போட்டவர்களுக்கும் பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸுக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரணை செய்ய வேண்டியது அவசியம் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...