கடையநல்லுாா் கருப்பாநதி அணையில் காளிஅம்மன் சிலை கண்டெடுப்பு
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுார் அடுத்துள்ளது கருப்பாநதி அணை
இந்த அணை தற்போது நிலவிவரும் கோடை வெயில் தக்கத்தால் வறண்டது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களாக ஷட்டர்களை பழுது, மற்றும் அணை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
அப்போது சிமெண்டு மூட்டைகளை வேலையாட்கள் அணையின் கரையில் இருந்து ஷட்டர் பகுதியில் போடும்போது சகதிக்குள் புதைந்து கிடந்த சிலை ஒன்றில் பட்டு சிமெண்டு மூட்டை உடைந்தது.
இதையடுத்து அணைக்குள் வேலையாட்கள் இறங்கி பார்த்தபோது, சகதிக்குள் சிலை ஒன்று சிறிதளவு வெளியில் தெரிந்தபடி இருந்தது.
இதனையடுத்து அங்கு வேலைசெய்து வந்த வேலையாட்கள் சகதியை தோண்டி பார்த்தபோது காளியம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிலையை மீட்டு சுத்தம் செய்து அணையின் அருகே பிரதிஷ்டை செய்தனர்.
மேலும் இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், நெல்லையில் உள்ள தொல்லியல் துறை வல்லுனர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த தகவல் பரவியதும் சொக்கம்பட்டி, கடையநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சிலையை வணங்கி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


