
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ”டி.என். ஸ்மார்ட் ஆப்” என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் சென்று ”டி.என். ஸ்மார்ட்” என டைப் செய்யவும், அதனை பதிவிறக்கம் செய்த உடன் ரிஜிஸ்டர் ஆப்சனை கிளிக் செய்யவும்.
பின்னர் யூசர் நேம் என்ற இடத்தில் அவரவர் அலைபேசி எண்ணை (மொபைல் எண்) உள்ளிடவும். பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்ணை கொடுத்து வெரி பை என்பதை கிளிக் செய்யவும்
.பிறகு பாஸ்வேர்டு மற்றும் கன்பார்ம் பாஸ்வேர்டை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய சொல்லை டைப் செய்து கிளிக் செய்தவுடன் உங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி பதிவு செய்து யூசர் டைப் என்ற இடத்தில் பப்ளிக் என பதிவு செய்யலாம்.
பின்னர், மாவட்டத்தின் பெயர் மற்றும் உங்களது இருப்பிடத்தினை பதிவு செய்து ரிஜிஸ்டர் ஆப்சனை கிளிக் செய்யவும். இது உங்கள் பெயருக்கு பதிவாகிவிடும்.
பின்னர், செயலியினை விட்டு வெளியே வந்து உங்களது யூசர் நேம் (மொபைல் எண்) மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ளே நுழைந்தால் பேரிடர் தொடர்பான அரசு தெரிவிக்கும் எச்சரிக்கை மற்றும் இதர விபரங்களை தெரிந்து கொள்ளலாம்
எனவே, அனைத்து தரப்பு மக்களும் தங்கள் மொபைல் போனில் ”டி.என். ஸ்மார்ட்” செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



