சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் வழிதவறிச் என்ற காஷ்மீர் இளைஞனுக்கு எப்படி சரியான வழியை காட்டினார் என்பதை இன்றளவும் பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்!
ஷேக் என்ற காஷ்மீரில் இளைஞர் ஒருவர் தனக்கு உதவி செய்யுமாறு சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் பதிவில் கேட்டிருந்தார். தயவு செய்து எனக்கு உதவுங்கள்; என்னுடைய பாஸ்போர்ட் சிதிலமடைந்து விட்டது நான் என்னுடைய வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்னுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது நான் ஒரு மாணவர் என்று அவர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்
அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால் நான் நிச்சயம் உதவுவேன்! ஆனால் உங்களது டிவிட்டர் ப்ரொபைலில் நீங்கள் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படி ஒரு இடம் இல்லவே இல்லையே என்று பதில் அளித்திருந்தார்.
இதையடுத்து அந்த மாணவர் தனது தவறை உணர்ந்து ட்விட்டர் ப்ரொபைலில் இருந்து இந்தியா ஆக்குபைட் காஷ்மீர் என்ற வாசகத்தை தூக்கிவிட்டு தான் ஒரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியன் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து பலரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு அப்போது பாராட்டுக்களை தெரிவித்தனர். ஒரு மாணவனை நல்வழிப்படுத்திய ஒரு ஆசிரியை என்ற வகையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன!
இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் அவர் தன்னுடைய ப்ரோபைலை சரி செய்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு, இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிக்கு, ”ஜெய்தீப் இவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்தியர். இவருக்கு உதவி செய்யுங்கள்” என்று டிவிட்டரிலேயே உத்தரவிட்டிருந்தார்! அவரது அந்த டிவிட்டர் பதிவினை இப்போது பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.




