December 6, 2025, 6:31 AM
23.8 C
Chennai

ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்..பெரியவா

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்….”பெரியவா.

(உண்மைதான். ஆனால் “எந்த ஸ்வாமி”?.)

(சாக்குப் பையில் ஒரு சூட்சுமம்)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.

சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள். எல்லாம் ரெடி. பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டால், அடுத்த நிமிஷமே புறப்பட்டு விடலாம்.
பெரியவா ஒரு வில்வ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள். சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்காக நின்றார்கள்.

அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

சபேசன் காரை நோக்கித் திரும்பினார்.

விரல்களால் ஒரு சொடுக்கல்.

சபேசன் திரும்பி வந்தார். ஆவலுடன்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.

பெரியவாள் அதைக் காட்டி, “இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ” என்றார்கள்.

எல்லோருக்குமே திகைப்பு. கருங்கல் ஜல்லியை கார்வேட் நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துக் கொண்டு போவானேன்? அந்த ஜல்லியில் அப்படி என்ன சிறப்பு?.

பெரியவாளிடம் விளக்கம் கேட்க முடியாது. எனவே உத்திரவுப்படி ஒரு சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாகக் கட்டி கார் டிக்கியில் வைத்துக் கொண்டு புறப்பட்டார் சபேசன்.

மலைப் பாறைகள் நிறைந்த புத்தூர் வழி.

இரவு.நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள்.கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை.
எல்லோரையும் காரிலிருந்து இறங்கிச் சொல்லி, உட்புறம் அலசிப் பார்த்தார்கள். ஒரு பெட்டி – பையைக் கூடக் காணோம். ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்து பார்த்தார்கள்.

மூட்டை!

“டேய், இங்கே இருக்குடா!…” கூவினான் ஒருவன். மூட்டையை எடுக்க முயன்றான் வேறொருவன். முடியவில்லை.. கனமாக இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு, “போ….போ…” என்று சபேசனை விரட்டினார்கள்.

சபேசன் படு வேகமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்று, ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லுவாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்!” என்றாள் அவர் மனைவி

.”எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!” என்றான் பையன்.

“காரை நொறுக்காமல் விட்டானே!” என்றாள் மகள்.

சபேசன் கார்வேட் நகர் இருந்த திசை நோக்கிக் கும்பிட்டார்.

கனமான சாக்குப் பையில் நிறையப் பணம் இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போட்ட கொள்ளையர்கள், வேறு சாமானியப் பொருள் எதையும் விரும்பாமல் விட்டு விட்டார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

இரண்டு நாள் சென்று அவர் மட்டும் தரிசனத்துக்கு வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பெரியவாளிடம் பரவசத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார்

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றார்கள் பெரியவா.

உண்மைதான்.

ஆனால், “எந்த ஸ்வாமி?” என்று சபேசனுக்கு நன்றாக புரிந்திருந்தது.

இனிமேல் ஜல்லியைப் பார்க்கிற போது, ‘ஒரு சல்லிக் காசு பெறாது’ என்று நினைக்க மாட்டார்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories