காலபைரவாஷ்டமி; புதாஷ்டமி! கிடைக்கப்பெறாத சிறப்பான நாள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
sri maha kaal bhairavar hd image - 2026

இன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.

இன்று கடைபிடிக்கும் ஜபம் தானம் போன்றவை அள்ள அள்ளக் குறையாத அட்சயமான பலன்களை அளிக்கும்.

இது அலப்ய யோக புண்ணிய காலமாக அறியப்படுகிறது.

சிவபெருமானின் ரௌத்ர அவதாரம் காலபைரவர். பரத்வம் (ஸ்ருஷ்டி), ரமணத்வம் (ஸ்திதி), வமனத்வம் (லயம்) முச்செயல்களையும் செய்யும் பரப்பிரம்மமே கால பைரவர் என்பது தந்திர சாஸ்திர விளக்கம்.

IMG 20191204 WA0020 - 2026

இவர் காசீ புண்ணிய க்ஷேத்திரத்தின் க்ஷேத்திர பாலராக காவல் புரிகிறார். உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காலபைரவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

இன்றைய தினம் காலபைரவருக்கு செய்யும் பூஜைகள் சகல காரிய சித்தியையும் அருளக் கூடியது.

IMG 20191204 WA0018 - 2026

பரமேஸ்வரனின் அம்சாவதாரம் காலபைரவர். இவர் கால ஸ்வரூபர். பயங்கரமான வடிவம் கொண்டவர். சாதாரணமாக காலபைரவருக்கு நான்கு கரங்கள் இருக்கும்.

IMG 20191204 WA0019 - 2026

ரௌத்திரமான நேத்திரங்கள், கூர்மையான பற்கள், எரியும் தலைமுடிகள்- இது கால பைரவ ஸ்வரூபம். நாகப் பாம்புகளை ஆபரணமாக அணிந்தவர். இவருடைய வாகனம் நாய்.

சிவ ஆகமங்களின்படி இன்று காலபைரவர் அவதரித்த நாள். இன்று செய்யும் காலபைரவ ஆராதனை ரட்சணையையும் அபீஷ்ட சித்தியையும் அருளும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.