ஏப்ரல் 20, 2021, 10:36 காலை செவ்வாய்க்கிழமை
More

  பக்தியில் முன்னேற்றம்.. எப்படி அறிவது? ஆச்சார்யாள் பதில்!

  abinav vidhya theerthar - 1

  சிஷ்யன் : ஆன்மீக வாழ்வில் கர்மாவின் பங்கு எவ்விதத்தில் இருக்கிறது?

  ஆசார்யாள் : கர்மாவைப் பற்றுதலில்லாமல் இறைவனுக்காகச் செய்தால் மனத்தூய்மை ஏற்படுகிறது

  சி : ஒருவனுக்குப் பலன்களில் பற்றுதல் இல்லாவிட்டால் செயல்களை ஒழுங்காகச் செய்யமாட்டான் என்று அர்த்தம் வருமா?

  ஆ : இல்லை, வராது

  சி; அப்படித்தானே யுக்திக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், எப்போது ஒருவனுக்கு வெற்றி, தோல்விகளில் கவனமில்லையோ, அப்போது தனக்கு சாமர்த்தியம் உள்ள அளவிற்குக் (அதிகபட்ச அள காரியங்களைச் செய்யமாட்டான் என்றுதானே வருகிறது?

  ஆ – இதற்கு எதிர்மாறான கருத்துத்தான் உண்மை, எவனுக்குப் பற்றுதலேயில்லையோ அவன் செயல்களை ஒழுங்காகச் செய்வான், ஏனென்றால், அந்தச் செயலை அவன் இறைவனின் ஆராதனையாகக் கருதுகிறான். எந்தப் பக்தனாவது இறைவனுக்குத் தீமை வாய்ந்த ஒன்றை அர்ப்பணிக்க விரும்புவானா? மாட்டான். கர்மயோகம் செய்பவன் தீய செயலைச் செய்ய மாட்டான். மேலும் எல்லாச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பான். அவன் மேல் உள்ள பக்தியினால் எல்லாக் காரியங்களையும் நல்ல காரியங்களாகவே செய்வான். இதைக் காட்டி லும் நேர்மாறாக, செயல்களின் பலன்களில் பற்றுதலுள்ளவன் ஒழுங்காகச் செயல்களைச் செய்ய முடியாது

  சி: இவ்விஷயத்தை சாஸ்திரத்திலும் கூறியிருக்கிறார்களா?

  ஆ : ஆம். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,

  முக்தஸங்கோகனஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமன்வித: |

  ஸித்யஸித்யோர்நிர்விகார:
  கர்தா ஸாத்விக உச்யதே !!

  ‘பற்றுதலில்லாமலும், அஹங்காரமில்லாமலும், தீர்மானத்துடனும், உற்சாகத்துடனும் இருந்து வெற்றியிலும் தோல்வியிலும் ஒரு நிலையுடையவன் ஸாத்விகமாகச் செய்பவன் என்று அழைக்கப்படுகிறான்’ என்று கூறுகிறார், இதிலிருந்து கிருஷ்ணர், “ஒழுங்காகக் காரியம் செய்யாதவர்களைப் பற்றிப் பேசவில்லை ” என்று தெரிகிறது

  சி: ஒருவன் தான் எல்லாச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அக்காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும் என நினைத்துச் செய்வானேயானால், அவன் கர்மயோகத்தை அனுஷ்டித்தான் என்று அர்த்தமாகுமா?

  ஆ: இல்லை, ஏனெனில் அம்மனிதன் காரியத்தின் பலனில் பற்றை விடவில்லை.

  சி: கர்மயோகத்தின் அனுஷ்டானத்தை எது கடினமாக்குகிறது?

  ஆ : பொருட்களில் இருக்கும் பற்றுதலும் இறைவனைக் குறித்து வேண்டிய அளவிற்கு பக்தியில்லாமல் இருப்பதும் கர்மயோகத்தை பயிற்சி செய்வதைக் கடினமாக்குகின்றன. பற்றுதலிருப்பவன் அர்ப்பணித்தேன் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அதிலேயே ஆசை வைத்திருப்பான், இறைவனிடத்தில் விசேஷமாக பக்தியில்லாவிட்டால், எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்ய வேண்டும், அது என் கடமை என்று தோன்றாது. மேலும் அவனால் முழுமனதோடு கர்மயோகத்தை அனுஷ்டிக்க முடியாது.

  சி : பலனில் பற்றுதலில்லாமல் இருந்தால் மட்டும் போதுமா? அல்லது இறைவனிடம் எல்லாவற்றையும் அர்ப்பணிக்க வேண்டுமா?

  ஆ : கர்மயோகம் ஆக வேண்டுமென்றால் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்தேயாக வேண்டும். பற்றுதல் இல்லாமல் இருந்தால்மட்டும் போதாது.

  சி : கர்மயோகத்தில் ஈடுபடுபவன் செயல்களை நன்கு செய்வான் என்பதற்கு ஆசார்யாள் ஏதாவது உதாரணம் கூறுவார்களா?

  ஆ : ஒரு பரீட்சையை ஒருவன் எழுதுகிறானென்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு மனதில் மிகவும் பற்றுதலிருக்கிறது. அவன் அன்றைய பரீட்சையை நன்கு எழுதாவிட்டால் என்ன ஏற்படும்? கவலையே ஏற்பட்டு அதன் காரணமாக அடுத்த நாள் பரீட்சையையும் நன்கு எழுத மாட்டான், ஏனென்றால், “தான் நன்கு செய்யவில்லையே, தான் நன்கு செய்யவில்லையே” என்ற கவலையே காரணம். ஆக, அடுத்த நாளும் சரியாக எழுதமாட்டான். பற்றுதல் இல்லாமல் இருப்பவன் பலனை ஈச்வரனுக்கு அர்ப்பணித்து மனது வைத்துச் சரியாகப் படித்து விடுவான், அவன் இரண்டு தேர்வுகளுக்கும் படித்து விடுவான். கவலையேயில்லாது படிப்பதால், அவன் செயல்களில் நன்கு ஈடுபாடு வைத்துக் கொள்வான். மேலும், ஒரு மனிதன் ஒரு செயலில் தக்கு விருப்பமில்லாததால் நன்கு செய்யாமல் போய் விடலாம். ஆனால், கர்மயோகத்தைக் கடைப்பிடிப்பவன் ‘ஈச்வரனுக்காக இதைச் செய்கிறேன். ஆதலால் என் கடமையாகவாவது சுருதி நான் நன்கு செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தனது செயலில் நன்கு கவனம் செலுத்து வான்

  சி: கர்மயோகம் செய்வதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது?

  ஆ : எல்லோரும் கர்மயோகத்தை அனுஷ்டிக்கலாம். கர்மயோகத்தை அனுஷ்டித்தால் மனம் மிகவும் சுத்தமாகி விடும், மேலும் இறைபக்தியும் வளரும். சுத்தமான மனதில்தான் ஞானோதயம் ஏற்படும். ஆகையால் எல்லோரும், எப்போதும் கர்மயோகத்தை அனுஷ்டித்து வர வேண்டும், அப்படிச் செய்தால் அனைவரும் நன்மை பெறலாம்.

  சி : இறைவனிடம் செயல்களின் பலன்களை மட்டும் அர்ப்பணம் செய்தால் போதுமா? அல்லது செயல்களையே அர்ப்பணம் செய்ய வேண்டுமா?

  ஆ : செயல்களையே அர்ப்பணம் செய்வது சாலச் சிறந்தது. அது முடியாவிட்டால் பலன்களையாவது அர்ப்பணம் செய்ய வேண்டும். கிருஷ்ணபரமாத்மா கீதையில்

  மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய!
  நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்சய: |

  (உன் மனதை என்னிடமே வை, உன் புத்தியை என்னிடமே வை, இப்படிச் செய்தால் என்னிடமே வாழ்வாய், இதைப்பற்றிச் சந்தேகம் வேண்டாம்) என்றும்,

  அத சித்தம் ஸமாதாதும் த சக்னோஷி மயி ஸ்திரம்
  அப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய!

  இம்மாதிரி என்னிடத்திலேயே மனதை வைக்க முடியவில்லையேன்றால் பயிற்சியினால் என்னை அடைவதற்கு முயற்சி செய் என்றும்

  அப்யாஸேப்யமர்த்தோsஸி மத்கர்ம பரமோ பவ
  மதர்த்தமபி கர்மாணி குர்வன்ஸித்திமவாப்ஸ்யஸி

  (பயிற்சியினாலும் செய்ய முடியவில்லையென்றால், எல்லாவந்தை யும் எனக்காகவே செய், எனக்காகவே காரியங்களைச் செய்தாலும் எபித்தியை அடைவாய்) என்றும்,

  அதைத்தப்யசக்தோsஸி கர்தும் மத்யோக மாச்ரித: |
  ஸர்வகர்ம பலத்யாகம் தத: குரு யதாத்மவான்

  (இதுவும் செய்ய முடியவில்லையென்றால், என்னிடத்திலேயே அடைக்கலம் அடைந்து எல்லாச் செயல்களின் பலன்களைக் கட்டுப்பாடுள்ள மனதுடன் அர்ப்பணம் செய்) என்றும் கூறியிருக்கிறார்.

  சி: ஒருவன் கர்மயோகத்தில் ஈடுபட்டுள்ளானென்றால் அவன் செயல்களை அதிகமாகச் செய்வானா?

  ஆ: அப்படி அர்த்தமில்லை. செயல்களை நான்கு விதமாகவோ அல்லது ஆறு விதமாகவோ பிரிக்கலாம், ஆறு விதமாகப் பிரித்தால் அவை 1. நித்ய கர்மா, 2. நைமித்திக கர்மா, 3.காம்ய கர்மா, 4.நிஷித்த கர்மா 5.உபாஸனா கர்மா, 6.பிராயச்சித்த கர்மா என்பவையாகும். முன்பே தீர்மானிக்கப்பட்டவாறு எந்தக் கர்மா பொருத்தமான காலத்தில் மீண்டும் மீண்டும் வருமோ அது நித்ய கர்மாவாகும். ஸந்த்யாவந்தனம் இதற்கு உதாரணம் ஆகும். நைமித்திக கர்மாவின் காலம், ஒரு நிச்சயமான நியமத்திற்குக் கட்டுப்படவில்லை. கிரஹணத்தின்போது செய்யப்பட வேண்டிய சில கர்மாக்கள் இதற்கு உதாரணம். கிரஹணத்தின் காலம் நிச்சயமாக இல்லை. ஆனால் ஸந்த்யாவேளையில் செய்யப்படும் ஸந்தியாவந்தத்தின் காலம் நிச்சயித்துக் குறிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, எக்கர்மாவை ஒருவன் ஆசையுடன் செய்கிறானோ, அது காம்ய கர்மா, சாஸ்திரத்தில், இவைகளைச் செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை. ஒருவன் தனது ஆசையினால்தான் இவைகளைச் செய்கிறான். எது செய்யப்படக் கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறதோ அது நிஷித்த கர்மாவாகும். அடுத்ததாக, உபாஷனை சம்பத்தப்பட்ட கர்மாக்கள் உபாஷனா கர்மாவின் கோஷ்டிக்குச் சேர்கின்றன. எதன் மூலமாக, செய்த ஒரு கர்மாவின் பலம் நாசமடையுமோ அது பிராயச்சித்த கர்மா எனப்படும். இந்த ஆறு வகைகளைச் சுருக்கி நித்ய தைமித்திக, காம்ய, நிஷித்த கர்மாக்கள் என்றும் நான்கு வகையாகக் கூறலாம். இவற்றில் நிஷித்த கர்மாவை ஒருபோதும் ஒருவன் மேற் கொள்ளக் கூடாது. காம்ய கர்மாவை முடிந்த அளவிற்கு விட்டுவிட வேண்டும். ஆனால் நித்ய, நைமித்திக கர்மாக்களைச் செய்தே தீர வேண்டும். இவைகளைச் செய்யும்போதும் பலனில் பற்றுதல் இல்லாமல் செய்ய வேண்டும். ஆகவே, ஒருவன் கர்மயோகம் செய்கிறானென்றால், வீணாக எல்லாச் செயல்களிலும் ஈடுபடுகிறானென்று அர்த்தமில்லை. எக்கர்மா தேவையோ அதைப் பற்றுதலில்லாமல் செய்வான், அதுவே கருத்து.

  சி : இறைவனின் அருளைப் பெறுவதற்காக ஒருவன் கர்மாக்களை இறைவனிடம் அர்ப்பணிக்கிறான். இந்திலைமையில் அவனுக்கு பலனில் பற்றுதலில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ‘இறைவனின் அருள்’ என்பதின்மேல் அவனுக்குப் பற்றுள்ளதே. அது கிடைக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் அல்லவா அவன் செயலைச் செய்கிறான்.?

  ஆ : ஒரு விதத்தில் பார்த்தால் நீ சொல்வது சரிதான். ஆனால், லௌகீகப் பலன்களில் ஆசை வைப்பதைவிட இறைவனிடம் ஆசை வைத்தால் ஒருவிதமான பந்தமும் ஏற்படாது. அதுபோல் இறைவனிடம் பற்று வைத்துக் கொண்டால், அது பந்தத்திலிருந்துதான் நம்மை நீக்கும், ஆனால் உத்தமமான கர்மயோகம் என்பது, இறைவனின் அருளைக் கூட விரும்பி செய்யப்படுவதில்லை. இறைவனுக்கு அளிப்பது என் கடமை என்று கருதிச் செய்வதேயாகும். இதனால்தான் சங்கர பகவத் பாதாள் கீதா பாஷ்யத்தில் ‘சச்வரார்த்தம் கரிஷ்யே'(இறைவனுக்காகச்
  செய்கிறேன்)என்று கருதிச் செய்ய வேண்டுமே தவிர ஈச்வர ப்ரீத்யர்த் தம் கரிஷ்யே’ (இறைவனின் ப்ரீதிக்காகச் செய்கிறேன்) என்று கருதி செய்யக்கூடாது என்கிறார். ஸந்த்யாவந்தனம் போன்ற கர்மாக்களில் ‘பரமேச்வரப்ரீத்யர்த்தம்’ என்று சொல்கிறோம். இவ்வாறு சொல்வதில் தவறுள்ளது என்று சொல்ல முடியாது. ஏனெனில், இங்கும் இறைவனுக்காகச் செய்கிறேன்’ என்று நினைத்தே செய்யலாம். மேலும், இது சம்பிரதாயத்தில் வந்துள்ளது. ஆகவே உத்தமமான கர்மயோகம் என் இறைவனுக்காகச் செய்யப்பட வேண்டுமே தவிர அவனது ப்ரீதிக்காக எதுவுமில்லை .

  சி : ஒருவன் கர்மயோகம் பயிற்சி செய்து கொண்டிருக்கையில், தான் முன்னேற்றம் அடைந்துள்ளானா எப்படித் தெரிந்து கொள்ளலாம்.?

  ஆ : பலனில் பற்றுதல் இல்லாமலிருக்க வேண்டும் என்று நான் சொன்னேன், ஒருவன் தான் கர்மயோகம் செய்வதில் முன்னேறியுள்ளானா இல்லையா எனத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதுதான் பலனில் பற்றுதலில்லாமல் இருப்பதா? ஆயினும், ஒருவனுக்கு ‘நான் ஆன்மீக வழியில் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேனா, கர்மயோகம் ஒழுங்காகச் செய்கிறேனா’ என்ற சந்தேகம் ஏற்படுமாயின், ‘தன் மனது புனித மாயிருக்கிறதா, அமைதியாக இருக்கிறேனா, கவலையில்லாமல் எல் லாச் செயல்களையும் இறைவனுக்காக என்று செய்து கொண்டிருக்கறேனா என்று பார்த்துக் கொள்ளலாம். அதுவே ஒருவனுக்கு அவன் கர்மயோகத்தை நன்கு செய்கிறானா என்று காட்டிவிடும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »