ஏப்ரல் 22, 2021, 8:29 காலை வியாழக்கிழமை
More

  கோடைக்கு குளு குளு டிப்ஸ்!

  summer
  summer

  காலை ஜூஸ் – நெல்லிக்காய் (நெல்லிக்காய்

  வெற்றிலை -1 இலை, இஞ்சி -சிறு துண்டு ,துளசி -2 இலை மட்டும், புதினா -2 இலை மட்டும் , கறிவேப்பிலை – 5 இலை மட்டும், கொத்தமல்லி – 7 ஈர்க்கு, எலுமிச்சை சாறு -1/2 மூடி அளவு, தண்ணீர் -150 மில்லி அனைத்தையும் அரைத்து வடிகட்டி தேவையான அளவு இந்துப்பு, குறு மிளகு சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்
  தினசரி வெறும் வயிற்றில் குடிக்கவும்

  உடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கெட்ட கொழுப்புகள், கழிவுகள் வெளியேறும்.

  ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை

  1. பேரீச்சை பழம் – தினம் நான்கு

  முருங்கை கீரை – வாரம் 2 முறை

  பீட்ரூட் ஜூஸ் – தினம் 100ml

  சுண்டைக்காய் – வாரம் 2 முறை

  6.கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை -தினமும்

  1. மாதுளை, திராட்சை – வாரம் 2 முறை 8. ஊற வைத்த கருப்பு

  உலர் திராட்சை தினமும் 4

  பீர்க்கங்காய் – வாரம் 2 முறை

  1. நெல்லிக்காய் – தினமும் ஒன்று

  உடல் எடை அதிகரிக்க வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகளில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இவற்றில் உள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. தினமும் சிறிதளவு உலர் பழங்களை எடுத்து கொள்வது உடல் எடையை அதிகரிக்க உதவும்.

  நன்னாரி சர்பத்

  tips - 1

  முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு- வாரம் 4 முறை

  கோடை வெப்பத்தையும், சிறுநீர்க்கடுப்பை போக்கவும் நன்னாரி சர்பத் நல்லது. இனிப்பும் சிறு கசப்பும் கொண்ட இது, கோடைகால உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் உடலில் நீர் வற்றாமல் பாதுகாக்கும். முன்னர் நன்னாரியின் வேரை தண்ணீரில் ஊறவைத்து குடித்து உடல் உஷ்ணத்தை குறைந்து வந்ததாகவும் நாளடைவில், சர்பத்தாக மாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது, எலுமிச்சை ஆரஞ்சு எசென்ஸ் கொண்டு பலவகையில் வருகிறது.

  நுங்கு ஐஸ்கிரீம்

  நுங்குகளை தோல் உரித்து, தேவைக்கேற்ப சர்க்கரை, பால், ஏலக்காய் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள் அவ்வளவு தான் நுங்கு ஐஸ்கிரீம் தயார். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன்
  புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க
  வழிசெய்யும். குழந்தைகளும் விரும்பி
  சாப்பிடும் வகையில் சுவையானதாகவும்
  இருக்கும்.

  கோடைக்கு ஆகாத உணவுகள்

  கோடையில் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிருங்கள்: இது உடலை மேலும் சூடாக்கி பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் நீரிழப்பையும் ஏற்படுத்தும்

  ஜில் தண்ணீர் நோ: வெயிலுக்கு தாகம் தணிக்க ஃப்ரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீர் நன்றாக இருந்தாலும். இது சீரணத்தை பாதிக்கும், நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும்

  காபி, ஆல்கஹால் வேண்டாம் கஃபைன் கலந்த காபி மற்றும் ஆல்கஹால் பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கவும்.

  ஆரோக்கியமான காலை உணவு

  • ராகி கீரை அடை: இரும்புச்சத்து ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும் சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும் மணத்தக்காளி கீரை தோசை: செரிமானம் வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும்

  பாசிப்பருப்பு கீரை புட்டு: ஊட்டச்சத்துகள் நிறைந்தது, உடலுக்கு வலு சேர்க்கும்.

  களி இப்பிடிச் செய்ங்க

  தேவை:தினை அரிசி மாவு, வரகு அரிசி மாவு,

  சாமை அரிசி மாவு, குதிரைவாலி அரிசிமாவு, உளுந்து மாவு தலா 1 கிண்ணம், உப்பு – சிறிது. செய்முறை:மாவு வகைகளை ஒன்றாக கலந்து சலித்துக்கொள்ளவும். மாவுடன் 3 பங்கு நீர் உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து அதனை கைவிடாமல் கிளறி கொதிக்க விடவும். இதனை குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும். இதனுடன் மோர்க்குழம்பும், புளிக்குழம்பும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

  • முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை

  வதக்கும்போது கரண்டியின் காம்பு பகுதியை வைத்து கிளறினால், கட்டியாக இல்லாமல் உதிரியாக இருக்கும்

  புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து, அதை தக்காளி சூப்புடன் சேர்த்தால் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்

  கீரை மசியல் செய்யும்போது புளிக்கு பதிலாக பொடியாக அரிந்த மாங்காயை சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

  வெந்தயத்தை கருப்பாக வறுத்து தூள் செய்து காப்பி பொடியில் கலந்து காப்பி போட்டு குடித்தால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

  கொத்தமல்லியை நறுக்கி அத்துடன் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வடையாக தட்டி வெயிலில் காய வைத்து வடகமாக செய்து ரசத்தில் பொரித்து போடலாம். *பாயசம் நீர்க்க இருந்தால் அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு, கொஞ்சம் தேன் கலந்தால் போதும் சுவையான கெட்டி பாயசம் தயார். * க்ரீம் பிஸ்கட்டிலுள்ள க்ரீமை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து, பாயசம், கீர், ஃப்ரூட் சாலட், பூசணி அல்வா ஆகியவற்றில் சேர்த்தால் சுவை கூடும்.

  சாதம் குழைந்துவிட்டால் பாதி எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, பிறகு வடித்தால் சாதம் ‘பொல பொல’ வென இருக்கும்

  காலையில் அரைத்த தேங்காய்ச் சட்னி மீதமாகிவிட்டால் அத்துடன் புளித்த மோர்
  அல்லது தயிருடன் மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து கொதிக்க விட வேண்டும். இதுவே மதிய உணவுக்கான மோர்க்குழம்பு ஆகிவிடும்.

  ஆப்பம் செய்யும்போது வட்டமாக
  வராவிட்டாலோ, கடினமாக இருந்தாலோ, மாவின் அளவுக்கேற்ப சூடான பால் விட்டு கலந்து பின் செய்தால் மெத்தென வட்டமாக வரும்.
  அரிசி, தானிய வகைகளை நீரில் கழுவினால் அதிலுள்ள தாதுக்கள் வைட்டமின்கள் நீரில் கரைந்துவிடும்
  எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.

  பாசிப்பயறை ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதை வடிகட்டி மிக்சியில் அரைத்து இட்லி போல வேகவைத்து எடுக்க வேண்டும். ஆறிய பின் ஈரல் போன்று வெட்ட வேண்டும்

  இதனுடன் வெங்காயம், தக்காளி வதக்க வேண்டும் மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, முந்திரிபருப்பு, பொரிகடலை, தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய் அரைத்து மசாலா தயாரிக்க வேண்டும். மசாலா சேர்த்து வெட்டி வைத்த துண்டுகளை பிரட்டி சமைத்தால் சைவ ஈரல் தயாராகி விடும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்துகள் இருப்பதால் எலும்பு தேய்மான குறைபாடுகள் நீங்கும். சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிடும் வகையில் எளிதில் ஜீரணமாகும்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »