பிறவி வராமல் செய்துகொள்ள வேண்டுமென்றால் தத்துவ விசாரம் செய்ய வேண்டும். அதற்கு பிராணன்கள் தேவை. பிராணன்களைக் காப்பாற்றுவதற்கு ஆஹாரம் தேவை.
ஆஹாரம் சம்பாதிப்பதற்கு ஆஹாரார்த்தம் கர்ம குர்யாத் அநிந்த்யம் என்று கூறப்பட்டது போல், சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட கர்மாக்களை மட்டும் செய்ய வேண்டும்.
ஆகவே, அத்யாத்ம பிரவ்ருத்தியில் நாம் முன்னேறுவதற்கு ஒரு ஸாதனமாய் உடலை வைத்துக்கொண்டு, அவ்வளவிற்கு மட்டும் அதை உபயோகப்படுத்த வேண்டும்.
மோக்ஷத்தை அடைய வேண்டும் என்னும் எண்ணமுள்ள ஒருவன் சரீரத்தைப் போஷித்து வந்தால், நதியைக் கடக்க முதலையைத் தோணியாக வைத்துக்கொண்டதைப் போல்தானாகும்.
ஆகவே சரீரத்தைப் போஷிப்பதனால் மோக்ஷம் அடைய முடியும் என்று நினைப்பவர்களின் கோஷ்டியில் நாம் சேரக் கூடாது.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்