ஸதாசிவ பிரஹ்மேந்திரர்,
ப்ராக்க்ருதபோகாவஸரே தாம்யஸி சேதோ முதா குதோ ஹேதோ: I த்யக்ரோத பிஜமுப்த்வா சோசன்னிவ நாம்ரமஸ்யேதி II
என்று கூறினார்.
மாம்பழம் வேண்டும் என்ற ஆசையிருந்தால் மாங்கொட்டையை நட வேண்டும். அது இல்லாமல் ஆலமரத்தின் விதையை நட்டுவிட்டு(அது பெரிதானவுடன்) மாம்பழம் ஏன் வரவில்லை என்று வருத்தப்பட்டானாம் ஒருவன்.
அதேபோல் முற்பிறவியில் பாவத்தை அதிகமாகச் செய்துவிட்டு அதற்குப் பலனாய் இப்பொழுது துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்து, “எனக்கு எதனால் இப்படித் துக்கம் வந்தது?” என்று கேட்டால் என்ன பிரயோஜனம்?
அந்தந்தக் காரியத்திற்கு அதற்குத் தகுந்த காரணம் இருக்க வேண்டுமே தவிர, அந்தக் காரியத்திற்கு விபரீதமான காரணத்தினால் அக்காரியம் உண்டாகவில்லை என்று வருத்தப்படுவது. நியாயமில்லை.
அதேபோல் உயர்ந்த பலனை நாம் விரும்புகிறோம். ஆனால், அதற்கு ஸ்ரத்தையோடு கூடிய காரியத்தைச் செய்ய மாட்டேனென்கிறோம். பிறகு எப்படி நமக்கு உயர்ந்த பலன் கிட்டும்?
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்