December 5, 2025, 11:40 PM
26.6 C
Chennai

14ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்..

சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு
நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதன்பிறகு தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை 7 மணி அளவில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை வேதபாராயணமும், 5.30 மணியிலிருந்து 6 மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், 6 மணியிலிருந்து 6.30 மணி வரை அன்னமய்யாவின் பாடல்கள், 6.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணனின் தொடக்க உரை அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது.

வேதபாராயணம் முடிந்து பச்சை வண்ண திரைகள் திறந்து பக்தர்களுக்கு பெருமாள் ஆசி வழங்கினார். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், மந்திரங்கள் ஓதப்பட்டு அக்னி பிரதிஷ்டை நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. பண்டிதர்கள் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். இரவு 9 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கல்யாண நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி, தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.  சீனிவாச திருக்கல்யாணத்தையொட்டி சென்னை தீவுத்திடல் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரம்மாண்ட மேடையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக 10 பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அமரும் இடங்களில் பிரமாண்ட விளக்குகளும், எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேதபண்டிதர்களும் வரவழைக்கப்பட்டனர்.திருமலை திருப்பதி கோயில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபவ மேடை தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

மாற்று திறனாளிகளுக்கு நுழைவாயில் எண்.6ல் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருந்து. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரங்கத்தை சுற்றிலும், தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது. இரண்டு மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருந்தது.திருக்கல்யாண வைபவத்தை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்ததாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

IMG 20220417 WA0044 - 2025
IMG 20220417 WA0040 - 2025
IMG 20220417 WA0047 - 2025
IMG 20220417 WA0038 - 2025
IMG 20220417 WA0045 - 2025
IMG 20220417 WA0048 - 2025
IMG 20220417 WA0036 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories