சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் -43
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
அஜகர வ்ருத்தி நியாய: (அஜகர: – மலைப்பாம்பு, வ்ருத்தி – வாழ்க்கை)
பாம்பு இனத்தைச் சேர்ந்த பெரிய உயிரினம் மலைப்பாம்பு. சுமார் பதினெட்டில் இருந்து முப்பது அடி வரை நீளமாகவும், இருநூறு பவுண்டு எடையும் கொண்ட இது, கடித்துக் கொல்லும் பாம்பு அல்ல.
ஆனால் மலைப்பாம்பு தனக்கு அருகில் வருபவரைச் சுற்றிவளைத்து மூச்சு விட முடியாமல் செய்து சட்டென்று விழுங்கி விடும். பெரிய மிருகங்களையும் ஒரு கணத்தில் வயிற்றில் போட்டுக் கொள்ளும். முயல், நரி போன்றவை இதற்கு ஒரு பொருட்டே அல்ல. சிறுத்தைப் புலியைப் போல தன் உணவுக்காக ஓட்டமெடுக்காது.
கடவுளின் படைப்பு அப்படிப்பட்டது. இந்த ‘அனகொண்டா’, பார்ப்பதற்கு ஒரு குன்றைப் போலவோ, ஒரு பெரிய சிலையைப் போலவோ, பெரிய மரக்கட்டை போலவோ இருந்து. பார்ப்பவருக்கு பிரமையை ஏற்படுத்தும். சிறிய மிருகங்கள் அதன் மேல் ஓடி விளையாடும்போது நேரம் பார்த்து பிடித்துக் கொள்ளும்.
அதுவரை, தவத்தில் இருக்கும் யோகியைப் போல அசையாமல் கிடக்கும். உணவு கிடைத்தபின் பொறுமையாக அசைந்து சென்று ஒரு மரத்தைச் சுற்றிக் கொண்டு தன்னுள்ளே சிக்கிய மிருகத்தைத் துண்டுகளாகும்வரை இறுக்கும். எத்தனை பெரிய மிருகமாக இருந்தாலும் அதற்குத் தகுந்தவாறு வாயைப் பெரிதாகத் திறக்கும் திறன் கொண்டது.
புராணங்களில் அஜகரம் – மகாபாரதத்தில் அனகொண்ட –
மகாபாரதம் வன பர்வத்திலும் மலைப்பாம்பின் வர்ணனை உள்ளது. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட பீமனை ஒரு மலைப்பாம்பு இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அது நஹுஷன் மலைப்பாம்பான கதை.
பாகவதத்தில் அஜகரம் – பால கிருஷ்ணன் தன் தோழர்களோடும் பசுக்களோடும் கோகுலத்தில் மாடு மேய்க்கச் சென்றான். கண்ணன் இல்லாத நேரத்தில் அகாசுரன் என்ற அசுரன் ஒரு பெரிய மலைப்பாம்பாக வந்து தன் வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு, பாதையில் குறுக்காக உட்கார்ந்திருந்தான். கோபாலர்கள் விளையாடியபடி, அது ஏதோ ஒரு குகை போலும் என்று எண்ணி அதன் வாய்க்குள் புகுந்தனர். பாலகிருஷ்ணன் நடந்ததை அறிந்தான்.
இறைவனுக்கு எதிரில் பாவிகளின் ஆட்டம் செல்லுமா? கண்ணனும் அந்த மலைப்பாம்பின் வாயில் புகுந்து தன் உடலைப் பெரிதாக்கி அந்த அஜகரத்திற்கு மூச்சு விடமுடியாமல் செய்தான். அந்த அசுரன் மடிந்தான். அதன் வாயில் புகுந்த கோபாலர் அனைவரும் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு வெளியில் வந்தனர். இது பாகவதத்தில் இருக்கும் காட்சி.
தர்மத்தில் நிலைத்த யது மகாராஜாவுக்கு, அவதூதர் தர்ம போதனை செய்தார். அப்போது ஸ்ரீ தத்தாத்திரேயர் அஜகரத்தை ஒரு குருவாக நினைத்து தியானிப்பது பற்றிக் கூறினார். இந்த சம்பவத்தை ஸ்ரீமத் பாகவதம் பதினோராவது ஸ்கந்தம் எட்டாவது அத்தியாயத்தில் பார்க்கலாம். மலைப்பாம்பிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய குணங்களை தத்தாத்திரேயர் இவ்விதம் எடுத்துரைத்தார்.
* யோகியானவன், தனக்குக் கிடைத்த ஆகாரத்தைக் கொண்டு திருப்தியடைவான். அது ருசியானதா, இல்லையா என்பது குறித்து கவலை கொள்ள மாட்டான். அளவைப் பற்றியும் சிந்திக்க மாட்டான். இந்த குணங்களுள்ள உயிரினம் மலைப்பாம்பு. அது எந்த முயற்சியும் செய்யாமல் இருந்த இடத்தில் கிடைத்ததை அனுபவித்து உதாசீனமாக வாழும் இயல்புடையது.
* மலைப்பாம்பு, உணவு கிடைக்காவிடில் உணவில்லாமலே காலம் கழிக்கும். அதற்காக எந்த முயற்சியும் செய்யாது. ஆன்மீக சாதகனும் கிடைத்ததை உண்பது, கிடைக்காவிட்டால் உபவாசம் இருப்பது, பிராரப்த கர்மாவின்படி கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவது, புலன்பங்களுககாக தவிக்காமல் இருப்பது போன்றவற்றில் அஜகரத்தைப் போல திருப்தியோடு வாழ வேண்டும்.
* அஜகரத்திற்கு எத்தனைதான் உடல் வலிமை இருந்தாலும், புலன்களில் காரிய சாதனைக்கான சக்தி இருந்தாலும், செயல் புரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். சாதகன், புலனின்பங்களுக்காக ஏங்கக் கூடாது என்பது மலைப்பாம்பு அளிக்கும் செய்தி.
ஆதிசங்கரரின் உபதேசம் –
க்ஷுத் வ்யாதிச்ச சிகித்ஸதாம் ப்ரதி தினம் பிக்ஷௌஷதாம் புன்ஞ்யதாம்|
சாத்வன்னம் ந து யாச்யதாம் விதிவஸாத் ப்ராப்தேன சந்துஷ்யதாம் ||
பொருள் – பசி என்பது ஒரு நோய் போன்றது. அந்த நோய்க்கு நிவாரணமாக, பிச்சையாக வந்த உணவை மருந்தாக ஏற்க வேண்டும். ருசிக்காக அலையாமல் பரமேஸ்வரனின் கிருபையாக, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று ஆதி சங்கரர் சாதகனுக்கு உபதேசிக்கிறார்.
இப்படி இருப்பவர்களை அஜகர விருத்தியில் இருப்பவர் என்பார்கள். இவர்கள்
கடைபிடிக்கும் விரதம் என்னவென்றால், ‘பிக்ஷை கிடைத்தால் பண்டிகை.
கிடைக்காவிட்டால் ஏகாதசி உபவாசம்”. அதனால்தான் தத்தாத்திரேயர் மலைப்பாம்பை குருவாக ஏற்றார்.
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் –
முன்னர் ஒரு சாது ஒரு வீட்டின் வாயிலில் நின்று, ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று யாசகம் கேட்டார். அவ்வாறு மூன்று முறை அழைத்து விட்டு பிக்ஷு சென்று விடுவார்.
அது அவர்களின் நியமம். அதனால் அந்த வீட்டு இல்லாள், குளித்துக்
கொண்டிருந்தவள், அவசரமாக ஆடையைச் சுற்றிக்கொண்டு பிச்சை எடுத்து வந்தாள். அந்த தாயின் வக்ஷஸ்தலத்தை கவனித்த சன்யாசி, ‘அது என்ன?” என்று கேட்டாராம். அதற்கு அந்த இல்லாள், ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு இறைவன் எற்படுத்திய பால்கலசம்’ என்று பதிலளித்தாளாம். ‘இன்னும் பிறக்காத பிள்ளைக்கே ஆண்டவன் ஆகாரம் ஏற்பாடு செய்கிறான்.
ப்படியிருக்க, நான் பிட்சைக்காக எதற்காக அனுஷ்டானம் செய்ய
வேண்டிய நேரத்தை வீணடிக்கிறேன்? கடவுளின் கிருபை இருந்தால் என்னிடமே பிச்சை வந்துவிடுமல்லவா?’ என்று எண்ணி அஜகர விருத்தியை அனுசரித்து ஆசிரமத்திலேயே அமர்ந்து சாதனையில் மூழ்கினார். சாதுவுக்கு அந்த கிராம மக்கள் பிச்சை ஏற்பாடு செய்தார்கள். அசையாமல் இருந்து எது கிடைக்குமோ அதையே கடவுளின் கருணைப் பிரசாதமாக ஏற்பது என்பது அஜகர விருத்தியின் பொருள்.
உலகியல் பொருள் – மற்றொரு கோணம் –
பெரிய மலைபபம்பின் வாயில் விழுந்து பல விலங்குகள், பசுக்கள், சில மனிதர்கள் கூட காணாமல் போகிறார்கள் என்ற செய்தியை கேட்டுள்ளோம். அது எவ்விதம்? அதன் இருப்பு யாருக்கும் தெரியாது. பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு பயங்கரமான பிராணியாகத் தென்படாது. புலி, சிங்கம் போன்றவை கண்ணில் பட்டால் நாம் கவனமாக இருப்போம். இந்த அஜகரம், தவத்தில் இருக்கும் திருட்டு கொக்குபோல இருந்து, அருகில் வரும் உயிரினம், கவனமில்லாமல் இருக்கும் போது விழுங்கிவிடும்.
அசையாமல் மரக்கட்டை போல கிடந்து, குழப்பத்தை ஏற்படுத்தி மோசம் செய்கிறது. அதாவது நம்ப வைத்து ஏமாற்றுகிற குணம் கொண்ட உயிரினமாக இந்த மலைப்பாம்பை பார்ப்பது மற்றொரு கோணம். தெய்வத்தின் சிருஷ்டி அப்படி உள்ளது. அதனை நிந்திப்பதிலோ விமர்சிப்பதிலோ எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் தான் கவனமாக
இருக்க வேண்டும்.
‘நம்பவைத்து ஏமாற்றி விட்டான்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். ‘நம்ப
வைக்காமல் எப்படி மோசம் செய்வது?’ என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.
ராட்சச குணம் – சில அரக்க குணம் கொண்டவர்கள், மக்களை மாயம் செய்து, ஏமாற்றுவார்கள். மரக்கட்டை போல் கிடந்தது நம்பிக்கை ஏற்படுத்தி, கபக்கென்று விழுங்கி விடும் மலைப்பாம்போடு இவர்களை ஒப்பிடுவர் ஆய்வாளர்.
லவ் ஜிஹாத் – அண்மையில் காதில் விழும் நம்பிக்கை துரோகங்களில் லவ் ஜித்ஹாத்தும் ஒன்று. இதன் மூலம் பல இளம் ஹிந்து பெண்கள் அழிந்து வருகிற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். பிற மதங்களைச் சேர்ந்த அரக்க குணம் கொண்டவர்கள், தங்கள் பெயரையும் வேஷத்தையும் மாற்றி கொண்டோ, மாற்றிக் கொள்ளாமலோ ஹிந்து பெண்களை நம்ப
வைத்து வலையில் சிக்கச் செய்து அவர்களைத் தம் மதத்திற்கு மாற்றி, அவர்களைத் தங்களுடைய மக்கட்தொகையை அதிகரிக்கும் இயந்திரமாகவோ, இஸ்லாம் தேசங்களுக்கு ஏற்றுமதி செய்தோ, தேவை தீர்ந்த பின் கருணையின்றி ஏமாற்றித் தூக்கி எறியும் செய்திகள் பலப்பல. நம்மவர்கள் இப்படிப்பட்டவர்களின் நடத்தைகளைக் கேள்விப்பட்டாலும் கண்களை மூடிக் கொண்டு அஜகரத்திற்கு பலியாகிறார்கள்.
இத்தகைய அரக்க குணம் கொண்டவர்கள், அஜகர நியாயதிற்கு உதாரணமாக கூறத் தக்கவர்கள். ‘என் காதலன் அப்படிபட்டவன் அல்ல’ என்று நினைப்பது, மலைப்பாம்பை ஒரு கல்லாகவோ, மரமாகமோ எண்ணி ஏமாறுவதற்கு ஒப்பானது.
சைபர் கிரைம்ஸ் – ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்கள், சைபர் குற்றவார்களைப் பற்றிய கதைகளைச் சுமந்து வருவதைப் பார்க்கிறோம். இது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குற்றம் யாருடையது? நம்பி ஏமாறுபவர்களுடையதே. எனக்கு அறிமுகமுள்ள ஒரு வியாபாரிக்கு
மோசக்காரர்களிடமிருந்து ஒரு நாள் போன் வந்தது. “அனந்தப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து விவசாய வேலை செய்து வரும் போது தங்களுக்கு தங்கக் காசுகள் கிடைத்தன. எங்களுக்கு அச்சமாக உள்ளது. நீங்கள் வந்து அவற்றை எடுத்துக் கொண்டு எங்களுக்கு பணம் கொடுங்கள்” என்று கேட்டார்கள். அவரை நம்ப வைத்து தம் கிராமத்திற்கு பணத்தோடு வரவழைத்து, மாதிரிக்கு சில உண்மையான தங்கக் காசுகளைக் காட்டி, மூன்று லட்சம் ரூபாய்க்கு போலி காசுகளைக் கொடுத்து
ஏமாற்றினர்
முகநூலை ஹேக் செய்து, தாம் ஆபத்தில் இருப்பதாக நம்ப வைத்து பணத்தை அபகரிக்கும் கதைகள் பல. அவற்றின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக இதனை எண்ணலாம்.
இதன் நீதி என்னவென்றால் – அஜகர விருத்தி ஆன்மீக சாதகர்களுக்கு ஆதரிசமானது. ஆனால், உலகியல் வாழ்க்கையில் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும்.
கடவுளின் படைப்பில் இது ஒரு விசித்திரம். அஜகரத்தின் வடிவமைப்பும் அசைவின்றிக் கிடக்கும் விதமும் பார்ப்பவரை குழப்பத்தில் ஆழ்த்தி ஏமாற்றும் ஆபத்து உள்ளது.