கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் திருவோண தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்பு!

Published:

IMG 20180921 191714 e1537539274946 - 2026கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

IMG 20180921 192209 e1537539308273 - 2026நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள கீழப்பாவூரில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும்

IMG 20180921 191754 e1537539345312 - 2026கீழப்பாவூர் அலர்மேல் மங்காபத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோயிலின் புரட்டாசி திருவோண உற்சவ விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

IMG 20180921 192035 e1537539373443 - 2026இதே போல் இந்த ஆண்டு திருவோண உற்சவ விழாவை முன்னிட்டு காலையில் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, புருசசுத்த ஹோமம், வருண ஜெபம் நடந்தது.

IMG 20180921 191912 e1537539404385 - 2026இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி தெப்பகுளத்தை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் உற்சவ மூர்த்தியுடன் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

IMG 20180921 192117 e1537539430535 - 2026இந்த தீர்த்தவாரி விழாவை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

IMG 20180921 191818 e1537539453992 - 2026

Related articles

Recent articles

spot_img