திருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…

thiruppavai pasuram 30 - 2026

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

விளக்கம்: கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சியர் அடைந்து வணங்கிப் பாடினர்.

திருவாய்ப்பாடியில் தாங்கள் பறையாகிய பேற்றைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை, திருவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமை பொருந்திய தாமரை மலர்களினால் ஆன குளிர்ந்த மாலையை உடைய பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாள் அருளிச் செய்தார்.

சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர், மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும், சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால், எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்! என்று ஸ்ரீஆண்டாள் பலச்ருதியாக இந்த மார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.

  • விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Hot this week

    இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

    சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

    தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

    திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

    பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

    மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

    இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

    IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

    ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

    Topics

    கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

    முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

    அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

    பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

    Entertainment News

    Popular Categories