December 7, 2025, 12:25 AM
25.6 C
Chennai

“பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்”-

“பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்”-பெரியவாளிடம் ஒரு பக்தை..

“எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே உள்ளே போய்விட்டார்”.-காஷ்ட மௌனத்தில் இருந்த பெரியவா.

.சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள். 12509614 1102529786458852 1440235304742122547 n - 2025
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.

என் நாத்தனார் பிள்ளைக்கு திடீரென்று கழுத்தில் ஒரு வீக்கம்,வலி என்றால் அப்படி ஒரு வலி.

“கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம்,உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்.

என் நாத்தனாருக்கு வயிற்றைக் கலக்கியது, பணச் சிலவு,ஆஸ்பத்திரி வாசம் என்பது ஒரு புறமிருக்க டாக்டர்களின் பேச்சும் உற்சாகமளிப்பதாக இல்லை.

“மன்னிக்கு காஞ்சிபுரம் சங்கராசாரியாரிடம் ரொம்ப பக்தி உண்டே…அடிக்கடி ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவாள். அவரிடம் என்ன தெய்வீக சக்தி இருக்கோ தெரியவில்லை.நாமும்தான் போய்ப் பார்த்துட்டு வருவோமே….!”

அவர்கள் காஞ்சிபுரம் சென்ற நாளில் பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். மௌனமாயிற்றே, பதில் சொல்லவில்லை. எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டாராம்.

என் நாத்தனாருக்கு மிகவும் ஏமாற்றம். “பெரியவாளைப் பற்றி கூடை,கூடையாகச் சொல்வாளே மன்னி…..இப்படி ஜாடை கூடக் காட்டாமல் போயிட்டாரே” என்று ஏக்கம்.

நாளைக்கு ஆபரேஷன்.

“தொண்டை என்னவோ போலிருக்கு, அம்மா…” என்று பையன் சொன்னதைக் கேட்டதுமே என் நாத்தனார் கதி கலங்கிப் போய்விட்டார்.

“கண்ணா…..கண்ணா…..என்னடா ஆச்சு…?”

வாந்தி ஆச்சு!

தேங்காய் ஓட்டின் ஒரு சில்லு வெளியே வந்து விழுந்தது. பையன் நிம்மதியாகி, “சரியாய் போச்சு” என்றான்.

மறுநாள் குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள்.

டாக்டர், பையனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தினார்.

“வலிக்கிறதா?”

“இல்லை…”

“ஆபரேஷன் தேவையில்லை…”

என் நாத்தனாருக்கு உடலில் புல்லரித்தது.

பெரியவாளின் தீவிர பக்த குடும்பங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories