“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”(அன்னையர் தினம்-ஸ்பெஷல் போஸ்ட்)

“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”
 
(“தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு”.
 
(அன்னையர் தினம்-ஸ்பெஷல் போஸ்ட்)19702540 1624112100967282 1821726314345878026 n - 2026
 
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை. வாசற்கதவைத் திறந்தபடி போட்டுவிட்டு எங்காவது போய்விடுகிறாள். அப்புறம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. வீட்டில் வேறு யாரும் இல்லை. அவளை மடத்திற்குக் கொண்டு வந்து விட்டு வைக்கலாமா?” என்று முறையிட்டார் கோபாலன் என்ற பக்தர். பெரியவாளிடம்.
 
“நல்லவேளை….எங்கேயாவது காட்டிற்குக் கொண்டு போய்,விட்டு விடலாமா என்றுகேட்காமல் என்னிடம் கொண்டு வந்து விட்டுவிடலாமா? – என்று கேட்கத்தோன்றியதே உனக்கு!”–பெரியவாள்.
 
“தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு”.-பெரியவாள்.
 
“தாயார்கள் பாடு இம்மாதிரி ஆயிடுத்து…” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
 
அதற்குள் கோபாலனின் மனம் படாத பாடு பட்டுவிட்டது. பெரியவாளிடம் அபசாரப்பட்டு விட்டோமோ? அதனால், மேலும் அதிகக் கஷ்டங்கள் வருமே?-என்ற கவலையும் வந்தது.
 
பெரியவா திரும்பி வந்ததும் மறுபடியும் காலில் விழுந்தார் கோபாலன்.
 
“ரொம்ப மன்னிக்கணும் பெரியவா. என் தாயாரைப் பற்றி தவறுதலா சொல்லிட்டேன்” என்று கெஞ்சினார்.
 
பெரியவா சாந்தமாக அறிவுரை சொன்னார்கள்.
 
“வயோதிக காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.தாய் -தந்தையர் சாபம் குடுத்தால் குடும்பம் வீணாகப் போயிடும். தனியாக உன்னால் உன் அம்மாவைக் கவனித்துக் கொள்ள முடியவில்லைன்னா, ஒரு ஆசாமியை ஒத்தாசைக்கு வெச்சுக்கோ.”-பெரியவாள்.
 
“பெரியவாளின் கட்டளையை மீறமாட்டேன்” என்று கூறி பிரசாதம் பெற்றுச் சென்றார், கோபாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories