ரா. கணபதி அண்ணா-சொன்னது

அண்ணங்கராச்சாரியார் கிட்டே பெரியவா கேட்டாளாம்,
‘இந்த சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’?
விசப்த ஸீலம்ன்னு அதுக்கு அவர் vaishnava stricture-ல definition சொல்ல ஆரம்பிச்சு, விஸ்தாரமா சொல்லிண்டும்வந்தவர், சட்டுன்னு நிறுத்திட்டு, ‘பெரியவா தான் சௌஸீல்யம்… பெரியவா தான் சௌஸீல்யம்’-ன்னு அழ ஆரம்பிச்சுட்டாராம். ரொம்ப ஒசந்த உத்தம புத்தி, மந்த புத்தியை சகிச்சுக்கிறது தான் சௌஸீல்யமாம்.



