“ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?”
(விழுப்புரமா, ஈச்சங்குடியா)
புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.
ஒரு பழைய பதிவு.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும் சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள். எனக்கு சந்தேகமாக இருக்கு.ஈச்சங்குடியில் மகாபெரியவாளின் தாத்தா இருந்தார்.அம்மாவின் அப்பா. அவருக்கு இரண்டு பெண்கள்.ஒரு பெண்ணுடைய பிள்ளை
ஸ்ரீமகாபெரியவாளின் குரு ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் என்று பெயர். அம்மாவின் தங்கையின் பிள்ளை.
ஸ்ரீ மகாபெரியவாளின் பெயர் சுவாமிநாதன். ஸ்ரீமகாபெரியவா ஈச்சங்குடியில் பிறந்தார் என்று ஸ்ரீமகாபெரியவாளின் சகோதரர்கள் சொல்கிறார்கள்.ஆனால் புத்தகங்களில்
திரு சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், “ஸ்ரீமகாபெரியவா
விழுப்புரத்தில் பிறந்தார்”, என்று எழுதிவிட்டார்.
நான் (பாலு) ஸ்ரீமகாபெரியவாளிடம் இதை பற்றி கேட்டபோது ஸ்ரீமகா பெரியவர் சொன்னார்-,
“நான் பொய் சொல்லமாட்டேன் சத்தியத்திற்கு பேசுபவன். எனக்கு எங்கு பிறந்தேன் என்று தெரியாது. ஒரு தம்பி நான் விழுப்புரத்தில் பிறந்தேன் என்று ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கான் .சாம்பமூர்த்தி சாஸ்திரி.
மற்றொரு தம்பிசிவன் சாஸ்திரிகள் என்பார்கள். என் தங்கை லலிதாம்மாஅவர்கள் நான் இரண்டாவது குழந்தையாக இருப்பதால் ஈச்சங்குடியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். அதனால்
நான் பிறந்த இடம் எனக்கு தெரியாதலால் நான் பொய் சொல்லமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.
அதனால் ஸ்ரீமகாபெரியவாளுக்கு ஈச்சங்குடி ,விழுப்புரம் இந்த இரண்டு இடங்களிலும் அவதார ஸ்தலம் கட்டப்பட்டுள்ளது



