December 6, 2025, 11:27 AM
26.8 C
Chennai

ருஷி வாக்கியம் (57) உடல் நோயும் மன நோயும் தீர….!

ru2 - 2025
பௌதீகமான மனித முயற்சி, தெய்வீகமான சாதனை இவ்விரண்டு வழிகளையும் பின்பற்றி மனிதன் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்து இஷ்டமானவற்றைப் பெற இயலும் என்பது மகரிஷிகளின் அறிவுரை.

ஆயின், தெய்வீக சாதனைகளை விடுத்து வெறும் மனித முயற்சியால் மட்டுமே துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகங்களைப் பெற முடியும் என்று நினைப்பது வெறும் பிரமை மட்டுமே! அது வெறும் ஒருதலைப்பட்சமான பார்வை! முழுமையான கண்ணோட்டம் அல்ல!

ஏனென்றால் எத்தனைதான் உலகியல் முயற்சிகளில் ஈடுபட்டாலும் தெய்வத்தின் துணை கட்டாயம் தேவை. அதனால் தெய்வீக சாதனைகள் செய்வது மிகவும் அவசியம். இதற்குச் சான்றாக பௌதீக சாஸ்திரங்களிலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
சனாதன ருஷிகளின் சிறப்பு என்னவென்றால் அனைத்து சாஸ்திரங்களிலும் “ஏக சூத்திரம்” ஒன்று இருக்கும். ஆயுர்வேதம், சிற்ப சாஸ்திரம், ஜோதிடம், யோக சாஸ்திரம் போன்றவை அனைத்திலும் ஆன்மிகத்துடன் அனுபந்தம் இருக்கும். எந்த ஒரு சாஸ்திரத்தையும் ருஷிகள் ஆன்மிகத்திலிருந்து வேறுபடுத்தவில்லை.

இவையனைத்தும் ஒன்று சேர்ந்து மானுடனை உய்விக்கச் செய்யும் என்ற கருத்தோடு மகரிஷிகள் இவை அனைத்திற்கும் ஏக சூத்திரமாக தெய்வீக சாதனைகளை குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை அறிந்து மானுட வாழ்க்கையை நிறைவு பெறச் செய்து கொள்ள வேண்டும் என்று அனைத்து சாஸ்திரங்களிலும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஆயுர்வேதம் பற்றிய நூலான சரக சம்ஹிதையில் ஒரு ஸ்லோகம் உள்ளது.

“ப்ரசாம்யத்யௌஷதை: பூர்வோ தைவயுக்தி வ்யபாஸ்ரயை:
மானசோ ஞான விஞ்ஞான தைர்ய ஸ்ம்ருதி சமாதிபி: !!”

“நம்மைப் பற்றியுள்ள ஆதி வியாதிகளான மானசீக நோய்களும் உடல் நோய்களும் நீங்க வேண்டுமென்றால் “தெய்வ வ்யபாஸ்ரயம்”, “யுக்தி வ்யபாஸ்ரயம்” என்ற இரண்டும் தேவை” என்கிறார்.

அதாவது இறைவனைச் சரணடைதல் மற்றும் யுக்தியைப் பயன்படுத்தி வியாதிக்கு தகுந்த மருந்துகள், பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுதல். இவ்வாறு இரண்டு வித முறைகளைக் குறிப்பிடுகிறார் சரகர்.

யுக்தியால் அதாவது நம் அறிவால் தெரிந்துகொண்டு வைத்திய விஞ்ஞானத்தை ஔஷதிகளின் வடிவத்தில் உபயோகிப்பது ஒருமுறை. தெய்வீகமான சாதனைகளை செய்வது, மந்திர ஜபம், தானம் போன்றவற்றைச் செய்வது இரண்டாவது முறை.

ஜோதிட சாஸ்திரத்தையும், தெய்வ வழிபாட்டு சாஸ்திரங்களையும், வைத்திய சாஸ்திரத்தையும் …. மூன்றையும் ஒருமித்து கடைப்பிடிக்கும்போது முழுமையான ஆரோக்கியத்தை பெறமுடியும் என்று தெரிவிக்கிறார்.

ஜாதகத்தில் எந்த கிரகத்தின் குறைவினால் எந்த மாதிரி ஆரோக்கியக் கேடு வரும் என்பது அறியப்படுகிறது. அதனால் ஜாதகத்தை ஆராய்ந்து எந்த கிரகத்தின் நலிவினால் எத்தகு நோய் வந்துள்ளது என்றறிந்து கொண்டு அந்த கிரகத்தோடு தொடர்புடைய மந்திர ஜபம், தானம், ஹோமம் போன்றவற்றைச் செய்தால் அந்த கிரகம் சாந்தி அடைந்து நோய் குணமாகிறது. அதனால் மருந்து எடுத்துக் கொள்வதோடு கூட அந்த கிரகத்தோடு தொடர்புடைய தெய்வத்தின் வழிபாடும் தேவை.
ru1 - 2025
அதேபோல் நித்தியமும் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பல வித ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம். அதனால்தான் நம் பெரியவர்கள் காலை எழுந்ததும் குளிப்பது, வீட்டில் விளக்கேற்றுவது, தெய்வ வழிபாடு செய்வது போன்றவற்றைக் கடைபிடித்தார்கள். அதேபோல் பிரத்தியேகமான பண்டிகை நாட்களில் விசேஷமாக தெய்வ வழிபாடு செய்வது போன்றவற்றைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தைச் சிறப்பாக வழிபடுவதன் மூலம் அந்த நாளோடு தொடர்புடைய கிரக தோஷங்கள் விலகுகின்றன. தினந்தோறும் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதோடு இதர தெய்வங்களையும் வணங்கி வந்தால் மனிதனுக்கு ஒரு வேளை ஜாதக சக்கரத்தில் விபரீதமான பலன்களோடு கூடிய ஆரோக்கியக் கேடு இருந்த போதிலும் அவன் செய்து வரும் நித்ய அனுஷ்டான பலத்தினால் அவை நிச்சயம் விலகி விடும். இது போன்றவற்றிற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

அதனால் ஔஷதங்களோடு கூட தெய்வீக சாதனையும் கட்டாயம் இருக்க வேண்டும். தெய்வீக சாதனையால் ஓரோருமுறை வைத்தியருக்கு சரியான வியாதி நிவாரணம் பற்றியும் சரியான மருந்து கொடுப்பது குறித்தும் பிரேரணை கூட கிடைக்கும்.

அதே போல் மானசீகமான வேறுபாடுகள், குழப்பங்கள் போன்ற மனோ வியாதிகள் நீங்க வேண்டுமென்றால், “ஞான விஞ்ஞான தைரிய ஸ்ம்ருதி சமாதிபி:” – இவை தேவை என்கிறார் சரகர்.

ஞானம் – அதாவது சாஸ்திர ஞானம் உள்ளவர்களுக்கு மானசீக நோய்களில் இருந்து குணமாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் விவேகத்தை உபயோகிப்பார்கள். துயரம் ஏற்பட்டாலும் ஞானி தாங்கிக் கொள்வான். சாஸ்திரங்களைப் படித்தறிவது ஞானம். அதனை அனுபவித்தில் கொண்டு வருவது விஞ்ஞானம்.

அடுத்தது தைரியம் – தைரியம் மன நோய்களை போக்க உதவும் சிறப்பான குணம்.

இனி ஸ்மிருதி – அதாவது நினைவு. நாம் யார் என்பதை மறக்காமல் நம் நிலைமை என்ன என்பதை உணர்ந்து இருப்பது ஸ்ம்ருதி. ஏனென்றால் துயரமும் துக்கமும் ஏற்படும் போது நம் நிலையை நாம் மறந்து போய் விடுவோம். ஆவேசத்தில் நம்மை நாமே மறந்து போகிறோம். மெய்மறக்கும் நிலைமை. அவ்வாறின்றி நாம் யார்? நம் நிலைமை என்ன? நாம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்? என்பவை நிரந்தரம் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்.

இனி, சமாதி – சமாதி என்ற சொல்லுக்கு, “புத்தியை சமாதானப்படுத்திக் கொள்ளும் வழிமுறை” என்று பொருள். இன்னொரு அர்த்தத்தில் சமாதி என்றால் “ஈஸ்வர பிரணிதானம்” என்று யோக சாஸ்திரத்தின்படி பொருள். அதாவது பரமேஸ்வரனை சரண் அடைவது என்பதும் மனோவியாதி நீக்கும் வழி முறை.

மானசீகமான தைரியம் ஏற்படுவதற்கு இறைவன் மீது அசையாத நம்பிக்கையும் அவனைச் சரணடையும் குணமும் தேவை.

அதனால்தான் பரமாத்மாவை யார் சரண் அடைகிறாரோ அவர் அனேக ஆதி வியாதிகளிலிருந்து குணமடைகிறார் என்ற அம்சம் புராணங்களில் மட்டுமின்றி தற்கால வரலாற்றில் கூட பலருடைய அனுபவத்தில் தெரிகிறது.

“சம்சார சர்ப்ப தஷ்டானாம் ஜந்தூனாம் அவிவேகினாம்
சந்த்ரசேகர பாதாப்ய ஸ்மரணம் பரமௌஷதம்”

  • என்பது பெரியவர்கள் கூறியுள்ள வாக்கியம்.

“சம்சாரம் என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு அந்த விஷத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்து என்னவென்றால் சந்திரசேகரனை ஸ்மரணை செய்து வணங்குவதே!” என்கிறார்கள்.

அதேபோல்,
“ஆர்த்தா விஷண்ணா: சிதிலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா:
சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம்
விமுக்த துஃகா: ஸுகினோ பவந்து” – என்றார்கள்.

“நாராயணா!” என்ற நாமத்தை நினைத்து வணங்குவதால் கட்டாயம் ஆரோக்கியம் மேம்படுவதோடு மனசாந்தி கூட கிடைக்கிறது. இவை அனைத்தும் அனுபவித்து நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இவற்றை யார் சாதனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அனுபவத்தில் உணர முடியும். எந்த ஆன்மிக சாதனையும் செய்யாமல் அவற்றை உதாசீனப்படுத்துபவர்களை மன்னிக்கக் கூடாது.

அதேபோல் யோக சாஸ்திரத்தில் கூட இறை நாமத்தையும் இறை மந்திரத்தையும் ஜபம் செய்வதால் அவை பலவிதமான மன நோய்களை நீக்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் யோகா மீது பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட யோக சாஸ்திரத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

யோக சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் இவையனைத்தும் ருஷிகள் கூறியுள்ள இறைவழிபாடு போன்ற சிறப்புகளின் உண்மைத் தன்மையை நிரூபித்துள்ளன.

இறைவனைச் சரணடைந்து அற்புதமான பலன்களைப் பெற முடியும் என்று கூறியருளிய ருஷி வாக்கியத்திற்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories