December 6, 2025, 4:56 AM
24.9 C
Chennai

தலைப்பாகை சாமியார்!

“தலைப்பாகை சாமியார்!”

(“ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை” உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது தலைப்பாகை சாமியாருக்கு!)

(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.64264513 2148749825236295 3038016151566155776 n 1 - 2025
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

“பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து ஏதாவது உதவி செய்யணும்….”

ஏழைத் தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு, மெல்லியதாக ஒரு வடம் செயின்.

இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.

“நான் ஒரு சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால் தொட்டதில்லை.என்னிடம் போய் பண உதவி கேட்கிறாயே!” என்று வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தரங்கத்தில் திட்டம்.

அதேசமயம், காமாட்சி கோயில் தலைமை ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில், பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர், குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.

பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண் கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை சுட்டிக்காட்டி “அவருக்குக் கட்டு” என்று உத்தரவிட்டார்கள்.

யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!

பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து ,”எல்லோருக்கும் நீயே கொடு”என்றார்கள்.

திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளே நுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை  வாகனத்தில் வந்திருந்தார்கள்.

பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன், உட்கார்ந்திருந்தவர்தான், ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும், முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள். யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி) எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.

இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும் ,பெரியவாள் எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி,ஆசீர்வதித்து,பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.

“ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை” உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது – தலைப்பாகை சாமியாருக்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories