December 6, 2025, 6:15 AM
23.8 C
Chennai

“காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்”-பெரியவா

“காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்”-…..பெரியவா
 
(-நடை,வடை,குடை)&(மூன்று ‘கோடி’கள் (காமகோடி ருத்ரகோடி, புண்யகோடி),
 
(பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது பெரியவாளிடம் ‘சூக்ஷ்மங்கள்’ அதிகம்).
 
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-16118342371 194072067780111 6881321337149165462 n - 2025
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
 
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் (தேவராஜன்) கோயில் இருக்கிறது.
 
அதை மலைக்கோயில் என்றுதான் பெரும்பாலானோர் சொல்வார்கள். ‘ஹஸ்திகிரி’யில் வாசம் செய்பவர், ‘ஹஸ்திகிரி நாதர்’ – இப்படி ஒரு பெயர்,வரதருக்கு. வருஷத்தில், ஏறக்குறைய முந்நூறு நாள்கள் உற்சவம் நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான் .திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம்.
 
காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் ரொம்ப பிரசித்தம். – நடை,,வடை,,குடை!
 
நடை
 
வரதராஜர், பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி. பல்லக்கு,வாகனம் தூக்குபவர்களுக்கு அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு,பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
 
வடை
 
அடுத்தது, காஞ்சிபுரம் மிளகு வடை.,காஞ்சிபுரம் இட்லி – நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு வடை பல நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
 
குடை
 
காஞ்சிபுரத்தில்தான் கோயில்களுக்கான குடை தயாரிப்பவர்கள் பல பேர் ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறார்கள்.குடையிலும் பல தினுசுகள் வகை. சின்னக் குடையிலிருந்து மிகப் பெரிய, மிகவும் அழகான கை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குடைகள் வரை தயாரிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டின் பல கோயில்களுக்கு மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் குடைகள்ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
“கோடி’கள்”
 
மூன்று ‘டை’கள் போலவே மூன்று ‘கோடி’கள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன .காமாட்சியம்மன் கோயில் விமானத்துக்கு காமகோடி விமானம் என்று பெயர். ஏகாம்பரேஸ்வரர் விமானம், ருத்ரகோடி விமானம்; வரதராஜர் கோயில் விமானம்,புண்யகோடி விமானம்!
 
இவ்வளவு நுட்பமான தகவல்களையும் கூறியவர்கள் மகா பெரியவாள்.
 
பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித் துளிகள் தெரிந்திருக்காது.
 
பெரியவாளிடம் ‘சூக்ஷ்மங்கள்’ அதிகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories