December 6, 2025, 10:48 AM
26.8 C
Chennai

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”

c620bc98 bf32 4dc0 ad61 46bfcf050173 - 2025

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”- ( *காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர
ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன்
அவர்* என்று
கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர்
கண்ணுக்குப்புலப்பட்டன.-(ஜோசியர்)”*விடுங்கோ
மாமா!*” என்ற சிறுவனின் குரலோ, “*என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு…விடு*”
என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை)

(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்)

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு நாள் காலை மகாலட்சுமி *[பெரியவாளின் தாயார்] *கண் விழித்தபோது, பக்கத்தில்
சுவாமிநாதனைக் காணவில்லை.வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம்
துழாவி வந்தாகிவிட்டது.காணோம். “*ஒருவேளை சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?*” என்றுபோய்ப் பார்த்தால்,
முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!

இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப் பட்டது.அந்த
சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து,”*குழந்தைகள் மடத்துக்கு
வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள்.சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச்
சொன்னார். நாலு நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச்
சொன்னார்!*” என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. “*எதற்காக
அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக்குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள
வேண்டும்?*”என்பது
புதிராக இருந்தது.
உண்மை இதுதான். *ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து
காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும்
நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு
கிடைக்கப் போவதில்லையே?*அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக்
கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க
வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம்
என்ற இடத்துக்குப் போய்விட்டார்.

இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே
கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்குசிநேகிதனையும் அழைத்துக்
கொண்டு அங்கே போய் விட்டான்.ஆச்சார்யரோ, “*முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா*
?”என்று கேட்டார். “*இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே
கிளம்பி வந்துட்டேன்.*” என்கிறான் குழந்தை.இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம்.
ஏனெனில், *இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!*

எல்லா தகப்பனாரையும் போல் *தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர
வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார்.* இத்தனை சின்ன வயசில்
இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்? *”இது என்ன
தேறுமா…தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?”*என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே
சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமியினĮ 1; அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார்.அவர்
ஒரு *சிறந்த
ஜோதிடர்*.மேலும்*சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்.*

“*வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு
ஜாதகம் எப்படி இருக்கு?*” என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப்
பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு
பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால்,
“*சுப்ரமண்யா!
நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலை யேபடாதே. நம்மைப்
போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில்
பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே
கொண்டாட வாழப் போகிறான்!*” என்று பெசினார்.

*வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி
வீசினார்!*

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க ஆவல் கொண்ட
ஜோசியர்,அங்கிருந்த சுவாமிநாதனிடம்,”*போ,கால் அலம்பிண்டு வா*” என்று
கட்டளையிட்டார். அலம்பிக் கொண்டு வந்தவனை, நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு
ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே
அலம்பினார்….துடைத்ார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படிேய கெட்டியாய்
பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

“*விடுங்கோ மாமா!*” என்ற சிறுவனின் குரலோ, “*என்ன இது! குழந்தை
காலை பிடிச்சுண்டு…விடு*” என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில்
விழவேயில்லை.அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழமக்கள் க்யூவிலே
நிற்கப்போகிறார்கள என்று நினைத்தார் போலும்.

*காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம
ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர்* என்று கட்டியம் கூறிக்
கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த
வெங்கட் ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்! *விஷ்ணுவுக்கும்
கிடைக்காத பாதத்தை இவர் பார்த்து விட்டார் என்றால், இவர் பாக்கியமே
பாக்கியம்!.*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories