December 6, 2025, 4:59 AM
24.9 C
Chennai

“ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?”

10482143 599228513527816 46027082804070919 n 2 - 2025

“ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?” (“ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய
சம்பவம்.-கண்டிப்பு,கருணை,அருள்,ஞான திருஷ்டி ஒருங்கே சேர்ந்த இந்த நிகழ்ச்சி
எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.)

((நான் தட்டச்சு செய்த முதல் பெரிய கட்டுரை-இது எனக்கு மிகவும் பிடித்த
கட்டுரை-10-01-2012ல் பதிவானது)

கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்,

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது.
காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மகா
பெரியவா.தரிசனத்துக்குவந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்
செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதானபாட்டியும், இளம் வயதுப் பெண்
ஒருத்தியும் வேக்வேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று
கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள்,மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே,மீனாட்சி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல
வந்திருக்கே?பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…பேரென்ன?” என்று வினவினார்
ஸ்வாமிகள்.

மீனாட்சி பாட்டி..”பெரியவா, நா எத்தனையோ வருஷமாமடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம்
பண்ணிண்டிருக்கேன். இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி
தெரிவிச்சுண்டதில்லே…அதுக்கான
சந்தர்ப்பம் வரலே.. ஆனா,இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே..இவ எம் பொண்
வயத்துப் பேத்தி.இந்த ஊர்ல பொறந்ததால காமாட்சினு பேரு வெச்சுருக்கு.நேக்கு ஒரே
பொண்ணு..அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு
கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல
போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன்.பள்ளிக்கூடத்துல சேத்துப்
படிக்க வெச்சேன்.படிப்பு ஏறலே. அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு.வயசு பதினஞ்சு
ஆறது..இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா எங்கடமை விட்டுது”
என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து
பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ,
இன்னிக்கு விடிய காலம்பற வந்து
நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத
புரிஞ்சுண்டேன். சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாட்சி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு.பையனும் இந்த
ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார்.அறுவது ரூவா சம்பளமாம். நல்ல
குடும்பம்,பிக்கல் புடுங்கல் இல்லே.ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி
இருக்குனு சொல்றா. எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…”
என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி
வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.அடுத்த சில
வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு
ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.
ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி,நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது
பண்ணுவேளோ..ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு
போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா. பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல
இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே. தலா ஒரு பவுன்ல இவ ரண்டு கைக்கு
மாத்ரம் வளையல் பண்ணி வெச்சுருக்கேன்…அதான் என்னால முடிஞ்சது. நா எட்டு
பவுன் ரட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று
முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ரட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?”
என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாட்சி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில்
போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம்பெ ரியவா,நா அப்டி சொல்ல வரலே.ஒங்களை
தரிசனம்ப ண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம்
வராளே..அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரட்ட வட
சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது?அப்டியெல்லாம் கேக்கற
வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன்சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு..பத்து பவுன்
கேக்காத எடமாபார்த்துக்கோ.அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார்
ஸ்வாமிகள்.

உடனே மீனாட்சி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டுபோகக்கூடாதுனு
பிரார்த்திக்கிறேன்.இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன்
தங்கமான குணம்,அவாத்துலரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே
எட்டெட்டு பவுன்ல ரட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா..வேறு
இண்ணுமில்லே பெரியவா,நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்யோசனையில்
ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார்,

“நா ஒரு கார்யம் சொல்றேன்….பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன்.என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாட்சியம்மன்
கோயிலுக்குப் போ.ரெண்டு பேருமாசேந்து, “எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு
கல்யாணம்ஜாம்ஜாம்னு நடக்கணும்….நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு
பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம்பண்ணுங்கோ,
அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.இப்டி
அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ…ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாட்சி நடத்தி
வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாட்சி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா
சொல்றேளே.அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்த நடத்தி
வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மகா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே.அம்பாளுக்கு, ‘பஞ்ச
ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு
அனுக்கிரகம்பண்றவ அவ,அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச்
சிரித்துக்கொண்டே சொன்னார்.

“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லிருக்கு. இன்னிக்கு
வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன்நகர்ந்தார்.பெரியவா
எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய
சீக்ரஹனுசொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன்,
இன்னிக்கேஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார்.பெரியவா
எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள்பாட்டி.
வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.அன்னை காமாட்சி அன்று விசேஷ
அலங்காரத்தில் ஜொலித்தாள்.

இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர்.
பேத்தியின் நட்சத்திரத்துக்கு ஓர்அர்ச்சனை செய்து பிரசதம் வாங்கிக்கொண்டாள்
பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரட்டவட சங்கிலி’யையே
பிரார்த்திதபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு
முன்பாக ஐந்து நஸ்காரம்பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டுவீட்டைவிட்டுப் புறப்பட்ட
மீனாட்சி பாட்டி,பாரிஜாதபுஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம்
நோக்கிவிரைந்தாள்.மடத்தில் ஏகக் கூட்டம்.மீனாட்சி பாட்டி இருபது முப்பது
பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.

பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், “இன்னிக்கு அனுஷ நட்சத்ரம். பெரியவாளோட நட்சத்ரமாம். அதனால் ஸ்வாமிகள்
இன்னக்கி மௌன விரதம்.யாரோடயும் பேசமாட்டாராம்.முக தரிசனம் மட்டும்தான்” என்று
விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாட்சி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து
எட்டு பவுன் ரட்ட வட சங்கிலியபத்திஞாபகப்படுத்தலாம்னுநெனச்சுண்டிருந்தேனே,அது
இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து
எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றிஅப்படியே அமர்ந்திருந்தது,அந்த பரப்
பிரம்மம்.”எட்டு பவுன்ரட்டவட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து
ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.

மகா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர்
சற்றுக்கடுமையாக,”பாட்டி,நகருங்கோ…நகருங்கோ..பெரியவாஇன்னிக்கு மௌன விரதம்
பேசமாட்டார்.பின்னாலே எத்தனபேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று
விரட்டினார்.காமாட்சியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன்
நடையைக்கட்டினாள்.அன்றைக்கும் காமாட்சியம்மன் சந்நிதியில் பெரியவா
கூறியபடி ‘பஞ்ச ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர்
இருவரும்.அடுத்தடுத்து ஞாயிறு,திங்கள் இரு நாட்களும் மகா ஸ்வாமிகள் மௌன விரதம்
மேற்கொண்டார்.

இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம்மட்டும் செய்துவிட்டுத்
திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள்.”பெரியவா
சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே,ஒண்ணுமே
நடக்கலியே…அம்மா காமாட்சி கண் திறந்து பாப்பாளா,மாட்டாளா?” என்று
தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது.அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்மிகவும் கலகலப்பாக
இருந்தது.ஆரணியிலிருந்து வந்திருந்தபஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப்
பரவாத்தில்ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா
முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்!

இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம்.
வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி,முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு
முன் வந்து நமஸ்கரித்து
எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான்கொண்டு வந்திருந்த
பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத்தேங்காய்கள்,சாத்துக்குடி,ஆரஞ்சு,பூசணி,மொந்தன்
வாழைக்காய்வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு,மீண்டும் ஒரு
தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம்விட்டஸ்வாமிகள்
சிரித்துக்கொண்டார். பிறகு கண்களை இடுக்கிக்கொண்டுஅந்த அம்மாவையே கூர்ந்து
நோக்கியவர்,

நீ நீடாமங்கலம்மிராசுதார்கணேசய்யரோடஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே? ரெண்டு
மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே..ஏதோ சொல்லிதுக்கப்பட்டுண்டே..இப்போ
சந்தோஷமா பெரிய வாழத்தாரோடநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாட்சி கிருபையில
அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு,”வாஸ்தவந்தான்
பெரியவா. மூணு வருஷமாஎங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி
வெச்சிருந்தா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்தஅவலத்தைச்
சொல்லி அழுதேன்.நீங்கதான் இந்த ஊர்காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி,அஞ்சு
பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம் பண்ணி..அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன்.என்ன ஆச்சரியம் பாருங்கோ..பதினஞ்சு
நாளக்கி முன்னாடி,ஜாம்ஷெட்பூர் டாடாஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள
ராதாகிருஷ்ணனே திடீர்னுவந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார். எல்லாம்
அந்த காமாட்சி
கிருபையும்,ஒங்க அனுக்கிரகமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக்
கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்..ரொம்ப சந்தோஷம்.தம்பதி க்ஷேமமா இருக்கட்டும்.
ஆமா…இவ்ளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று
கேட்டுவிட்டு
இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே,”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது
பெரியவா.அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.
ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி..ஒம் பொண்ணு,மாப்ளய திருப்பியும் அம்மா
காமாட்சிதான் சேத்து வெச்சிருக்கா,அதனால்நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு
போயி அவளுக்குஅர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு”
என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா…இது இந்த சந்நிதானத்துலயே
இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு
வந்திருக்கேன்.பெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு
பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்
.
“பேஷா,பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல சாப்டுட்டுத்தான்
ஊருக்கு திரும்பணும்..ஞாபகம் வெச்சுக்கோ”என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி
வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால்பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக
நடையைக்கட்டினாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டுவியாபாரம்
செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம்,”அடியே காமாட்சி, இன்னிக்கு
பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா
பண்ணிடுவோம்.

நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா,அஞ்சு ஜோடி வாழப்பழம்,வெத்தல
பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா,பார்ப்போம் என்று காசைக்
கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடி யே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி,
கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்

பாட்டி: “அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன்.
ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டாவேற கதி நேக்கு இல்லேடிம்மா.நீதான் எப்டியாவது
அந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி
கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின் தொடர
இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.

நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்து கொண்டு இருந்தனர்
இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக்
கேட்டுத்திரும்பிப் பார்த்த பாட்டி,ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே? என்ன
பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.

“ஒண்ணும் பறிபோகலே பாட்டி,கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று
சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள்.

பேத்தி.அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். பேத்தி,,”நோக்குப் பின்னால
குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா.. அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல
பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது
அறுந்துருக்கே பாட்டி..பவுனா..முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.

அ’தைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி,”பவுனாத்தான்
இருக்கணும்னு தோண்றதுடி,காமாட்சி,எட்டு..எட்டரை பவுன் இருக்கும்னு
நெனக்கிறேன்.இது பெரியவா கிருபைலகாமாட்சியேநமக்குஅனுக்கி
ரகம்பண்ணியிருக்கா.சரி…சரி….வா,வெளியே போவோம்,மொதல்லே” என்று சொல்லியபடி
அதைத்தன்புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாகவெளியே
வந்துவிட்டாள்.அன்று பிரதட்சிணத்தில், “பஞ்சஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம்
வருவதை] மறந்து விட்டாள்.

மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ
காத்திருந்தனர்.பேத்தியுடன் வந்த மீனாட்சி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து
எழுந்தாள்.பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன்
சங்கிலி கண்டெடுத்தவிஷயத்தைச் சொல்லலாமா…வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்குகாமாட்சியம்மன் கொயில்ல
பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம்கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..ஆனா ஒம்
பேத்தி கைலகெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து!அந்த
சந்தோஷம்….நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்னபண்ண விடலே. காமாட்சி பூர்ணமா
அனுக்கிரகம்பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே..என்ன நான் சொல்றது
சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓடவில்லை.
“ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே,
அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச்சொல்லியிருக்கானு
நெனச்சுண்டுட்டேன்….அந்த சந்தோஷத்துலஇன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும்
மறந்துட்டேன்” என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டுபோய்
காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ….அறுந்தத பத்த வக்கறத்துக்கோ
மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு,

“அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என
முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். நீங்க சொன்னதெல்லாம்
சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச்
சொந்தம்?”

“அம்பாள் காமாட்சிக்கு.”

“நீயே சொல்லு…அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்ல முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று
மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து,கை
நடுங்க ஸ்வாமிகளுக்கு
முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணிஇரண்டு,மீனாட்சிபாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார்
ஸ்வாமிகள்.. அப்போது,கலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின்
தர்மபத்தினிஅம்புஜம் அம்மாள், சொகமே உருவாகத் திரும்பி வந்துஆச்சார்யாளை
நமஸ்கரித்து எழுந்தாள்.பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த
ஸ்வாமிகள்,

“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே,

“வேற ஒண்ணுமில்லே பெரியவா,ரண்டு மாசத்துக்கு முன்னாடிஒங்க உத்தரவுபடி
காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவைபண்றச்சே,’பிரிஞ்சிருக்கிற எம்
பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா,எங்கழுத்துல
போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்’னு
அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடிஅந்த ரட்ட வடத்த
சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப்போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி
எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன்.

ஒரு எடத்லயும் கிடைக்கலே…இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?”என்று புலம்ப
ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாட்சி பாட்டியின்பக்கம் தன் பார்வையைத் திருப்பி,
அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.

ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.
பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரட்ட வட பவுன் சங்கிலியைக்
கையில் எடுத்தாள்.

மகிழ்ச்சியுடன், “அம்மா பங்கஜம்… நீ தவறவிட்ட ரட்ட வடம்இ துவா பாரு?” என்று
காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்
“இதேதான்….இதேதான்…..பாட்டி..இது எப்படி இங்கே வந்தது? ஆச்சரியமா
இருக்கே!” என்று வியந்தாள்.நடந்த விஷயங்கள்அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி
முடித்தாள் பாட்டி.

மீனாட்சி பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள்….

“பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத்
தெரிவிச்சுக்கிறேன்.எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரட்ட வட சங்கிலி
போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த
ரட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்ருக்கேன். இன்னிக்கு
சாயந்தரமேஒங்களையும், பேத்தி காமாட்சியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு
போய்,எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன்.அதோட கல்யாணச்
செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்”

என்று ஆறுதல் அளித்தாள். ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாட்சியாக
அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து
எழுந்தனர்.

ஆச்சார்யாள்,மீனாட்சி பாட்டியைப் பார்த்து,,”இன்னிக்கு நீயும்ஒம் பேத்தியும்
கொயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே.சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு
நமஸ்காரம்பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.மீனாட்சி
பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும்
வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories