spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை'ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சை!"

‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சை!”

- Advertisement -

‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை
விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய
அபகாரம் செஞ்சுட்டோம்’னு புரிஞ்சது–மடத்து அதிகாரிக்கு.

தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு
இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத்
தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
மீறி முயற்சி பண்ணினா,சங்கடம்தான் வரும்னு சொல்லுவா

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி-13-07-2017 தேதியிட்ட இதழ் (சுருக்கம்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1934-35 ம் வருஷம் நடந்த நிகழ்ச்சி.

சன்யாசிகளுக்கு எதுமேலேயும் ஆசை கூடாதுன்னு சொல்றாளே
தான் அப்படித்தான் இருக்கோமா? ஒரு வேளை தனக்கு வேளை
தவறாம பிட்சாவந்தனம் கிடைச்சுடறதால தனக்கு ஆசை
எதுவும் வரலையோ?இதை எப்படித் தெரிஞ்சுக்கறது.அப்படிங்கற
எண்ணம் ஆசார்யாளுக்கு ஏற்பட்டது.அதுக்கு அவர் வைச்சுண்ட
பரீட்சை என்ன தெரியுமா?சுத்த உபவாசம். அதாவது தீர்த்தம்கூட
குடிக்காம உபவாசம்.

தினமும் தனக்கு பிட்சாவந்தனம் பண்ணிவைக்கற பாரீஷதரைக்
கூப்டு மத்தவா யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு உத்தரவு
போட்டுட்டு, சொட்டு ஜலம்கூட குடிக்காம உபவாசம்
இருந்துண்டிருந்தார் மகாபெரியவா.

ஆச்சு ரெண்டு வாரம் ஓடியிருக்கும்.மடத்துல முக்கியமான
பொறுப்புல இருந்த ஒருத்தருக்கு பெரியவாளோட தினசரி
நடவடிக்கைகள்ல ஏதோ மாற்றம் இருக்கிற மாதிரி மனசுக்குப்
பட்டிருக்கு. என்னவா இருக்கும்னு யோசிச்ச அவருக்கு,மகா
பெரியவாளோட தேகத்துல லேசா தளர்ச்சி இருக்கிறது
தெரிஞ்சிருக்கு. அப்புறம் மெதுவா மெதுவா விசாரிச்சு,பெரியவா
உபவாசம் இருக்கிறதை பாரீஷதர் மூலமா தெரிஞ்சுண்டுட்டார்.

விச்ராந்தியா இருந்த சமயத்துல பெரியவா முன்னால் நின்றார்.

“என்ன விஷயம்?”-பார்வையாலே கேட்டார் பரமாசார்யா.

“நீங்க உங்களையே வருத்திண்டு எதுக்காகவோ உபவாசம்
இருக்கேள்னு எனக்குத் தெரிஞ்சுடுத்து. நீங்க உடனடியா அந்த
விரதத்தைக்கைவிடணும்.உங்கதேகம் ரொம்ப பலவீனமாகிண்டே
வர்றது!” அப்படீன்னு கெஞ்சினார் அவர்.

(அவர் மனசை சமாதானப்படுத்தறதுக்காக-பாரீஷதரை நாளை
முதல் பிட்சாவந்தனம் என்று சொல்லி -போன பிறகு
பாரீஷதரிடம் நான் சொன்னதை அப்படியே மறந்துடு என்று
உத்தரவு போட்டார் பெரியவா-இந்த விஷயமும் மடத்து
அதிகாரிக்கு தெரிந்துவிட்டது.-சமையலறையைப் பார்த்தபிறகு)

“பெரியவா…நீங்க நாளைக்கே பிட்சாவந்தனம் பண்ணி,
உபவாசத்தை கைவிட்டாகணும்,இல்லைன்னா நான்
மடத்தைவிட்டே போய்டுவேன்!” உரக்கவே சொன்னார் அதிகாரி.

அவரைப் பார்த்து மெல்லிசா ஒரு புன்னகை செஞ்ச ஆசார்யா,
“போயேன், ஏன், நீ இல்லைன்னா மடம் நடக்காதோ?”-பெரியவா.

அப்படிக் கேட்டதும் கொஞ்சம் சுர்ருன்னு ஆன அந்த அதிகாரி;
“மடத்தைவிட்டுப் போறது உங்களுக்கு லக்ஷ்யம் இல்லைதானே,
அப்படின்னா, நான் இந்த லோகத்தைவிட்டே போய்டறேன்!”
கொஞ்சம் ஆவேசமா சொன்னார், அந்த அதிகாரி.

அவரோட ஆவேசத்தப் பார்த்த பரமாசார்யா;
“ஏன் இப்படித் தொந்தரவு பண்ணறே? ஒனக்கு நான் விரதத்தை
பூர்த்தி செய்யணும்.அவ்வளவுதானே…அப்படின்னா நீயே
பிட்சாவந்தனம் பண்ணிவைச்சுடு!” அமைதியாகச் சொன்னார்.

“பிட்சாவந்தனம் செஞ்சுவைக்கறதுன்னு தீர்மானிச்சுட்டே,
அப்புறம் அதை ஏன் நாளைக்குன்னு தள்ளிப்போடணும்.
இன்னிக்கே இப்பவே செஞ்சுடு. வேற யாரையும் கூப்டாம
நீயே போய் இருக்கிறதை எடுத்துண்டு வா!”-பெரியவா

வழக்கமா ராத்திரி பிட்சைக்கு கொஞ்சம் பாலும் பழமும்தான்
எடுத்துப்பார் பெரியவா. உபவாசத்தை பூர்த்தி பண்ண்றதுக்கும்
அதுதான் தோதாக இருக்கும் என்று தீர்மானம் பண்ணிண்ட
அந்த அதிகாரி,அங்கே இருந்த பழக்கடைகள்ல இருந்து ரெண்டு
மூணு எடுத்துண்டு வந்து பெரியவா முன்னால வைத்தார்.

அதையெல்லாம் பார்த்த பரமாசார்யா,”வெறும் கனிவர்க்கத்தை
மட்டும் எடுத்துண்டு வந்தா எப்படி? இன்னிக்கு சுக்ரவார
பூஜைக்குப் பண்ணின சொஜ்ஜி,சுண்டல் பிரசாதமெல்லாம்
இருக்குமே அதையெல்லாம் எடுத்துண்டு வா!” அப்படின்னார்.

யார்கிட்டேயும் இதுவேணும்,அதுவேணும்னு கேட்காத
ஆசார்யா, தன்கிட்டே அப்படிக் கேட்டதும் அவசர அவசரமா
ஓடினவர்,பிரசாதங்களப் பாத்திரத்தோட அப்படியே
கொண்டுவந்து வைச்சார்.

அடுத்து நடந்ததுதான் நம்பவே முடியாத ஆச்சரியம்.
சொக்கநாதர் மீனாட்சியைக் கல்யாணம் செஞ்சுண்டப்போ
குண்டோதரனை வைச்சு ஒரு திருவிளையாடல் நடத்தினாரே,
அப்படி ஒரு லீலையை அங்கே தானே பண்ண ஆரம்பிச்சுட்டார்
ஆசார்யா.

ஆமாம்…. இருந்த கனிவர்க்கம் எல்லாத்தையும் சாப்டு
முடிச்சவர்,பிரசாதங்களையும் துளிவிடாம சப்பிட்டுட்டார்.
அதுமட்டுமில்லாம, “என்ன அவ்வளவுதானா? வயறார
பிட்சாவந்தனம் செஞ்சுவைக்கறதா சொல்லி என்னோட
ஜடராக்னியைத் தூண்டிவிட்டுட்டியே..போ இன்னும் ஏதாவது
இருந்தா எடுத்துண்டு வா!” அப்படின்னார்-பெரியவா.

நடக்கிறது நிஜம்தானா? கனவா?ன்னு நம்ப முடியாம திகைச்சு
நின்ன அவருக்கு, அடுத்ததா என்ன கொண்டு வர்றதுன்னுகூட
தெரியலை. அப்படியே திருதிருன்னு விழிச்சுண்டு நின்னார்.

“என்ன, சாப்டறாப்புல ஒண்ணும் இல்லையா? அப்படின்னா
போய் பால் இருக்கான்னு பார்த்து எடுத்துண்டு வா!”
உத்தரவு வந்தது ஆசார்யாகிட்டேர்ந்து.

ஓடோடிப்போய் கூஜா நிறைய பாலை எடுத்துண்டு வந்து
பெரியவா முன்னால வைச்சார் அவர். அடுத்த க்ஷணம்
அதையும் குடிச்சு முடிச்சுட்டு நிமிர்ந்து பார்த்தார்,பெரியவா.

அந்தப் பார்வைல இருந்த தீட்சண்யத்தைப் பார்த்தோரோ
இல்லையோ அப்படியே பதறிப்போய்விட்டார் அந்த அதிகாரி.
‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை
விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய
அபகாரம் செஞ்சுட்டோம்’னு புரிஞ்சது அவருக்கு. சாஷ்டாங்கமா
பெரியவா திருவடியில விழுந்தார்.

தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு
இருக்குன்னா, அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத்
தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
மீறி முயற்சி பண்ணினா,சங்கடம்தான் வரும்னு சொல்லுவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe