
ரயில் டிக்கெட்டில் தமிழ் மொழியும் இடம்பெறும் : இந்திய ரயில்வே வாரிய கூடத்தில் முடிவு.
குட்கா விறபனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கிய ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் மணல் விற்பனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிக்கான மணல் விற்பனை செயலியை முதல்வர் வெளியிட்டார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க காரணம் என்ன? , காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என உயரதிகாரிகளிடம் முறையிட்டீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் புகார் குறித்து விளக்கம் தர மனுதாரருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் தடுப்பணை இல்லை மேல்மட்ட பாலம் மட்டுமே கட்டப்படுகிறது; பாலத்தால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீருக்கு பாதிப்பில்லை : தமிழக முதல்வர் பழனிசாமி.
அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.
பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். ஆவின் பால் பொருட்களில் கலப்படம் இல்லை என்பது ஆய்வில் உறுதி : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு : நெதர்லாந்தில் மோடி பேச்சு.
திருப்பதி திருமலையில் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கு வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் லட்டு வழங்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டெல்லி: ரேஷன் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஓராண்டுக்கு பழைய விலையே தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக கோரிக்கை – அதே கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு சட்டசபையிலிருந்து வெளிநடப்பு.
பால் பொருட்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறிய புகாருக்கு நெஸ்லே நிறுவனம் மறுப்பு.
காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது.
முரசொலி பவளவிழாவில் பங்கேற்க அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பு.
காவல்துறையில் பணிபுரிவோர் தங்கள் குறைகளை tnpolicewelfare@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் – காவல்துறை தலைமை இயக்குநர் வேண்டுகோள்.
சிலை, கஞ்சா கடத்தலில் போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கடத்தலில் சம்மந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை வேண்டும் : தமிழிசை.
GST நடைமுறைபடி புதிய வரியை ஜூலை 1 முதல் திரையரங்குகளில் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தெரிவித்தோம் – அபிராமி ராமநாதன்.
கலப்பட பால் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்.
ஸ்டாலின் ஏரிகளை தூர்வாரும் பணியை தொடங்கும் முன்பே அரசு தொடங்கியது. ரூ.300 கோடி செலவில் 2,025 ஏரிகள் தூர்வாரப்படும் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி.
ஜூலை 1 முதல் பான் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்போர் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் : மத்திய அரசு.
ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை.
செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான தமிழகத்தின் 40 இடங்களில் வருமானவரி சோதனை.
ஜம்மு – காஷ்மீர் : அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்-போலீஸ், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் சுமார் 40,000பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் : ஒருவந்தூரில் உள்ள அரசு மணல் குவாரியை மூடக்கோரி காவிரி மீட்பு குழு சார்பில் இன்று கடையடைப்பு & உண்ணாவிரதம்.
சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனுடன் எம்பி.பிரபாகரன் சந்திப்பு.
குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் வேட்புமனு தாக்கல்.
ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தின் மாற்று வேட்பாளராக வெங்கய்ய நாயுடு மனுதாக்கல்.
முதுநிலை மருத்துவ படிப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜூலை 5 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.
எதிர்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார் வரும் ஜூலை1 ம் தேதி சென்னை வருகை, ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார்.
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிப்பு.
சென்டாக்கில் நடந்த முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டாவிடம் அளித்துள்ளேன் : கிரண்பேடி.
நெய்வேலி அருகே ஏரியை தூர்வாருவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை : சேர்வலாறு அணை ஒரே நாளில் 13 அடி உயர்வு.
தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதன் 2வது கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் பெல்ஜியத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆகஸ்ட் முதல் வாரம் வரை இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கும் அவர், அதன்பின் சென்னை திரும்புவார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் :சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கொல்கத்தா : நாடாளுமன்றத்தில் 30 ம் தேதி நள்ளிரவில் நடக்கும் ஜி.எஸ்.டி மசோதா அறிமுக கூட்டத்தை புறக்கணிப்போம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.



