December 6, 2025, 10:47 PM
25.6 C
Chennai

“குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம”

10406745 859208287442471 99817598003990377 n 4 - 2025

“குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம” (ஒரு குயவனுக்கு அனுக்ரஹம்)

(“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம்
என்கிறது, ஸ்ரீருத்ரம்!”)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.

பக்தர்கள் பலவிதமான – தேங்காய்,பழம்,கற்கண்டுமலர்கள்,காய்கறிகள் என்று
காணிக்கை செலுத்தினார்கள்.

ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டுவந்து பெரியவாள் முன்பாக வைத்துவிட்டு
வணங்கினான்.

அவன் கொண்டுவந்திருந்த மண்சட்டி,பானை, அகல் விளக்கு போன்றவைகளை
ஒவ்வொன்றாகக் கையில்
எடுத்து, தடவிப் பார்த்து குழந்தைபோல் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அருகிலிருந்த தொண்டரைப் பார்த்து,
“உனக்கு ஸ்ரீருத்ரம் தெரியுமோ?” என்று கேட்டார்கள்.

“தெரியும்”

“நாலாவது அனுவாகம் சொல்லு..”

தொண்டர், ” நம ஆவ்யாதினீப்யோ…” என்று தொடங்கி சொல்லிக்கொண்டே போனார்.
இடையில் “குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம” என்ற வாக்கியம் வந்ததும்,
பெரியவாள் ஜாடை காட்டி நிறுத்தச் சொன்னார்கள்.

“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும்பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம்
என்கிறது, ஸ்ரீருத்ரம்!” என்று உணர்ச்சியோடு மொழிந்தார்கள்
பெரியவாள்.

மண்பாண்டங்கள் கொண்டுவந்த குயவனுக்கு வேஷ்டி – புடவை கொடுக்கச் சொன்னார்கள்.

“மவனுக்கு படிப்பு வரலீங்க,சாமி” என்று முறையிட்டான் குயவன்.

“உனக்கு படிக்க தெரியுமா?”

“தெரியாதுங்க…”

“பையன் படித்தால் நல்லது.டியூஷன் வைத்தாவது சொல்லிக் கொடு.
படிக்காவிட்டாலும்பரவாயில்லை.உன் தொழிலைக் கற்றுக்கொடு.உன்னைக்
(படிப்பறிவில்வராமல், ஒரு தொழில் மட்டும் தெரிந்த உன்னை) காப்பாற்றும் கடவுள்
அவனையும் காப்பாற்றுவார்…”

குயவன் பிரசாதம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாகப் போனான்.

பெரியவாளின் சொற்களுக்கு அழிவு கிடையாது.
கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories